Header Ads



மாற்றி எடுத்து செல்லப்பட்ட உயிரிழந்தவர்களின் சடலங்கள் - வைத்தியசாலை பணிப்பாளர் நேரில் சென்று ஆறுதல்


கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த இருவரின் சடலம் உறவினர்களால் மாற்றி எடுத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர் இன்று நேரில் சென்று ஆறுதல்களைத் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த இருவரினதும் வீடுகளுக்குச் சென்று ஆறுதல் கூறியதுடன், இனி இப்படியான துயரச்சம்பவம் நடைபெறக்கூடாது என நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரில் பங்குகொண்டதாக கிளிநொச்சி வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த இருவரின் சடலம் உறவினர்களால் மாற்றி எடுத்துச் செல்லப்பட்ட சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.

மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்தவரின் சடலங்கள் உடல் கூறு பரிசோதனைக்காக பொலிஸார் முன்னிலையில் உறவினர்களினால் அடையாளம் காட்டப்படுவது வழமை.

அன்றைய தினம் குறித்து சம்பவமும் அவ்வாறே நடைபெற்றபோது அடையாளம் காட்டப்பட்டதில் ஏற்பட்ட தவறால் இந்த துயரச் சம்பவம் எதிர்பாராது நடைபெற்றுள்ளது.

எனவே துயருற்றிருக்கும் குடும்பத்தினரை மேலும் துயருறச் செய்த சம்பவமானது தவிர்க்கப்பட வேண்டுமென்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை.

குறித்த சம்பவம் தொடர்பாக நாமும் துயரில் பங்குகொள்வதோடு ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்வதாக நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து தனது இரங்கலை வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.