Header Ads



இந்து கோயிலுக்கு ஒருகோடி ரூபாய், நிலத்தை கொடுத்த முஸ்லிம் முதியவர்


ஆஞ்சநேயர் கோவிலுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக முஸ்லிம் முதியவர் வழங்கியுள்ளார். அவருக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

பெங்களூரு காடுகோடி பெலதூர் காலனியில் வசித்து வருபவர் 65 வயதுக்கும் எச்.எம்.ஜி.பாஷாவுக்கு பெங்களூருவில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒசகோட்டே வலகேரபுராவில் பழைய மெட்ராஸ் ரோட்டில் மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. இதையொட்டி ஒரு வீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு செல்ல பாதை இல்லாததால் பக்தர்கள் சிரமப்பட்டு சென்று வந்தனர்.

மேலும் அந்த கோயிலைப் புனரமைக்க பக்தர்களும், கோயில் நிர்வாகத்தினரும் முடிவு செய்தனர். இதற்காக பாஷாவிடம், சில பக்தர்கள் நிலம் வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பாஷா, ஆஞ்சநேயர் கோயில் அருகில் உள்ள 1.5 சென்ட் நிலத்தைக் கோயிலுக்கு தானமாக வழங்க முடிவு செய்தார். அதன்படி அவர் ரூ.1 கோடி மதிப்பிலான 1.5 சென்ட் நிலத்தை வீர ஆஞ்சனேய சாமி கோயில் அறக்கட்டளைக்கு தானமாக எழுதி கொடுத்துள்ளார் என அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

இந்துக்கள், முஸ்லிம்கள் என்ற பாகுபாட்டை யாரும் காணக் கூடாது. நாம் அனைவரும் மனிதர்கள். சில அரசியல் தலைவர்கள் சொந்த நலனுக்காக மக்களிடையே சாதி, இனம், மொழி அடிப்படையில் பிரித்து வைத்துள்ளனர். தற்போதைய தலைமுறை வகுப்புவாத நடவடிக்கைகளை சிந்தித்து வருகிறது என்று எச்.எம்.ஜி.பாஷா கூறியுள்ளார் என்று தினத்தந்தி செய்தியில் உள்ளது.

2 comments:

  1. Just within 10-years, your name will disappear... You are talking humanitarian but they are talking RACISM.. 300 years u people have governed India with Humanitarian & brotherhood but what happened now, at least you people cant breath for Baabar-Masjith.... Pls aware

    ReplyDelete
  2. சிலை வணக்கத்தை ஊக்குவிப்பதாக அமைகிறதா?

    சஜகத்துள் ஜாரியாவாக எதாவது செய்திருக்கலாமே?

    ReplyDelete

Powered by Blogger.