Header Ads



இலங்கை VIP க்கள் கொரோனா, தடுப்பூசியை சீனாவிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளனர் – நளின் Mp


நாட்டின் அதி முக்கிய பிரபுக்கள் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தம்மை தாக்கக்கூடாது என்னும் நோக்கில் சீனாவிடமிருந்து தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -05- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தடுப்பூசி ஒன்றின் விலை 70 அமெரிக்க டொலர்கள் எனவும் இரண்டு கைகளிலும் இந்த தடுப்பூசி ஏற்றப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணை ஜனாதிபதி சேக் முஹமட் பின் ரசீட் அல் மக்டும் அண்மையில் இந்த தடுப்பூசியை ஏற்றிக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று இலங்கையில் வாழும் அதி முக்கியமான பிரபுக்கள் சீனாவிடமிருந்து தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ளதாகவும் மக்கள் பெரும் துயரத்தை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த அதி முக்கிய பிரபுக்கள் யார் என்பதனை நளின் பண்டார சுட்டிக்காட்டாத போதிலும், ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்களையே அவர் மறைமுகமாக குற்றம் சுமத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. 70 dollars = almost 1000 rupees only... if this is true,,, all srilankan should be able to enjoy this facility.
    oppsition can sponsor this to citizens and people will bring them back to power....

    hope this not the time foe political gain... if u feel that this can hep people,, do help...

    ReplyDelete

Powered by Blogger.