Header Ads



ஜோ பைடன், கமலா ஹரீஷ்க்கு சஜித் வாழ்த்து


அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் கமலா ஹரீஷ்க்கு இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 3-ஆம் திகதி நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அபார வெற்றி பெற்றார். இவர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்திய வம்சாவளியான கமலாஹரீஷ் துணை அதிபராக பொறுப்பேற்கிறார்.

இவர்களின் வெற்றிக்கு உலகத்தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் Sajith Premadasa தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மிக உயர்ந்த அலுவலகத்தில் பணியாற்ற தயாராகும், வரலாற்று வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

துணை அதிபராக தெரிவு செயப்பட்டுள்ள கமலா ஹரீஷ்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில், அமெரிக்காவை மாற்றுவதற்கான உங்களின் முயற்சிகள் மிகச் சிறந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.