Header Ads



முஸ்லிம்களின் உடல்களை தொடர்ந்து தகனம் செய்ய வலியுறுத்தும் குணதாஸ - அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டாமென்கிறான்


(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மரணமடைகின்ற முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வது தொடர்பில் சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருக்கும் நிலையில், இந்த சுகாதார நடைமுறைகளை மீள்பரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை தவறான முன்னுதாரணத்தையே வழங்குகின்றது என்று தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் குணதாஸ அமரசேகர சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இவ்வாறு இன அல்லது மத அடிப்படைவாதிகள் குழுவொன்றினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு அமைவான நடைமுறையில் உள்ள சட்டத்தையோ, கொள்கைகளையோ அல்லது விதிமுறைகளையோ மாற்றியமைக்கக்கூடாது என்றும் அவர் மேலும் ஜனாதிபதியை வலியுறுத்தியிருக்கிறார்.

அடிப்படைவாதிகளின் கோரிக்கைகளுக்கு அமைவாக கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நடைமுறைகளை மாற்றியமைக்க வேண்டாம் என்று வலியுறுத்தி தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் குணதாஸ அமரசேகர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

மதஅடிப்படைவாதிகளின் தேவைகளுக்கேற்ப செயற்படும் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பின்பற்றப்பட்டுவரும் நடைமுறைகளை மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் முற்பட்டுவருகின்றது என்ற எண்ணப்பாடு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

சமூகவலைத்தளங்களில் வெளியிடப்படும் தகவல்களுக்கு அமைவாக நோக்குகையில், கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மரணமடைகின்ற முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வது தொடர்பில் சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் தமது எதிர்ப்பை வெளியிட்டுவருகின்றனர்.

கடந்த பாராளுமன்ற அமர்வில் இதுகுறித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டதாகவும் அறியமுடிகின்றது. அக்கோரிக்கையின்படி எவ்வித இன, மதபேதங்களுமின்றி கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களைப் புதைக்காமல், தகனம் செய்யவேண்டும் என்று தொழில்நுட்பக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை மீண்டும் மறுபரீசிலனைக்கு உட்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.

இவ்வாறு இன அல்லது மத அடிப்படைவாதிகள் குழுவொன்றினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு அமைவான நடைமுறையில் உள்ள சட்டத்தையோ, கொள்கைகளையோ அல்லது விதிமுறைகளையோ மாற்றியமைப்பது அல்லது மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதென்பது மிகவும் தவறான முன்னுதாரணமொன்றை வழங்குவதாகவே அமையும் என்பதை உங்களிடம் வலியுறுத்த விரும்புகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 comments:

  1. You are the Racist and fundementalist.

    We do not mind you burn your dead body or living body. But do not harm other riligious rights of other citizens.

    It is wrong for any individual or government trying to take away the religious rights of another Sri lankan

    It is the right of all muslims, asking for burial as it is their religious rights.

    We ask the president of srilanka, not to listen racist and fundamentalist in this regard.

    We are Sri Lankans, we respect the rights and feelings of other ethnic groups, same time , let us practice our fundamental rights of our religion.

    ReplyDelete
  2. உனக்கு அல்லாஹ் ஹிதாயத்தை நஸீபாக்குவானாக. ....

    ReplyDelete
  3. GUNADASA, AGUNADASA VELAA VAGAI
    PEYNNEY !!!!

    ReplyDelete
  4. குணதாச அமரசேகர என்பவன் ஒரு படித்த முட்டாள். உலகம் தெரியாத குருட்டு செவிடன், இலங்கையில் இனவெறியில் மூழ்கிப்போன ஒரு கிணற்றுத் தவளை. நீ எங்கள் நாட்டில் பிறந்த ஒரு அசிங்கம். முஸ்லிம்களின் தேவையை முஸ்லீம் பாராளமன்ற உறுப்பினர்கள் மட்டும்தான் பேசமுடியும். மக்கள் பாராளுமன்றம் வந்து பேசமுடியாது. எங்கள் மத சுதந்திரத்தின் பிரகாரம் எதைக்கேட்டாலும் நாங்கள் மத அடிப்படைவாதிகளா ?

    ReplyDelete
  5. All because of Facebook heroes who pubkised ...sonahan always rocks before it succeed

    ReplyDelete
  6. குணதாச அமரசேகர என்பவன் ஒரு படித்த முட்டாள். உலகம் தெரியாத குருட்டு செவிடன், இலங்கையில் இனவெறியில் மூழ்கிப்போன ஒரு கிணற்றுத் தவளை. நீ எங்கள் நாட்டில் பிறந்த ஒரு அசிங்கம். முஸ்லிம்களின் தேவையை முஸ்லீம் பாராளமன்ற உறுப்பினர்கள் மட்டும்தான் பேசமுடியும். மக்கள் பாராளுமன்றம் வந்து பேசமுடியாது. எங்கள் மத சுதந்திரத்தின் பிரகாரம் எதைக்கேட்டாலும் நாங்கள் மத அடிப்படைவாதிகளா ?

    ReplyDelete
  7. அறியாமையின் உச்சகட்ட பேச்சு இவருக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.

    ReplyDelete
  8. This racist Gunadasa is a fool. He is 100% racist.

    ReplyDelete
  9. Mr.kunathas Amarsekara,Do you understand that asking not only some Muslim MPP or all Muslims community.

    ReplyDelete
  10. சாகப்போர வயசுல நல்ல வார்த்தைகள பேசு

    ReplyDelete
  11. அப்போ இத்தனை நாளாக தகனம் செய்ய முன்னின்று செயற்பட்டவன் இவன் தானா .... இவன் முன்னொரு காலத்தில் முஸ்லிம்களுடன் நன்கு இருந்தவன் தானே......

    ReplyDelete
  12. Gunadasa u are a bastard.if u are rwal u wk not play with other religion.
    Curse of muslims wl burn you.
    U r the worst jathiwthi ever v the whole world agree,r u sure ur father.

    ReplyDelete
  13. முஸ்லிம் நாடுகளாலும் நிறுவனங்களாலும் பிரஞ்சு நாட்டுக்குக் கொடுத்த அடிபோன்று இவர்களுக்கும் கொடுத்தால் வழிக்கு வருவார்கள்.

    ReplyDelete
  14. If a dead body transmits virus to others and is burnt for that purpose, what about the hospital, beds, mortuaries where the patient or dead body kept, Don't all they need ? Cremation

    ReplyDelete

Powered by Blogger.