November 28, 2020

ஜனாஸாக்களை வெளிநாட்டில் நல்லடக்கம், செய்வது குறித்து பரிசீலனை - முஸ்லிம் பணக்காரர்களும் ஒத்துழைப்பு

இலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தகனம் செய்வது தொடரும் நிலையில், மாற்றுத் திட்டமொன்று முன்மொழியப்பட்டுள்ளது.

அதாவது கட்டார் அல்லது மாலைதீவு போன்ற முஸ்லிம் நாடுகளின் சம்மதத்துடன், அந்த நாடுகளுக்கு கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எடுத்துச்சென்று, நல்லடக்கம் செய்வது குறித்தும் சில தரப்புக்கள் ஆராய்ந்துள்ளன.

இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின், ஆதரவை பெறுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், முஸ்லிம் பணக்காரர்கள் இவ்வாறான ஒரு திட்டம் முன்னெடுக்கப்பட்டால், அதற்கு தம்மால் 100 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கித்தர முடியுமெனவும் வாக்குறுதி வழங்கியுள்ளனர்.

தற்போது இலங்கை - கட்டார் விமான சேவைகள் தினமும் நடந்துவரும் நிலையில், இத்திட்டத்தை சாதகமாக்கலாமெனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் இதுபற்றிய இறுதி அறிக்கை, துறைசார் வைத்தியர்கள் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் கிடைக்குமென எதிர்பார்த்துள்ளதாகவும் முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு உறுதிப்படுத்தினார்.

சட்டத்துறை மற்றும் அரசியல்துறை வட்டாரங்களும் இத்தகவலை, ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தின.

இதுவரை இறுதி முடிவுகள் எதுவும் எடுகப்பட்டவில்லை என்றபோதிலும் இத்திட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும் அவர்கள் மேலும் Jaffna Muslim இணையத்திடம் கூறினர்.

22 கருத்துரைகள்:

This is a slap on the face of Buddhist extremists. This is a good idea please do it so. In the same way, Qatar or Maldives could send back bodies of Sinhalese corona victims for cremation in Sri Lanka from their countries. Sri Lankan government should make arrangement to clear their land from virus..

useless decisions
It will never happen

முஸ்லீம் செல்வந்தர்களுக்கு ஏன் இந்த விஷப் பரீட்சை?உள்நாட்டில் ஜனாசாவை அடக்க அனுமதி அல்ல அதனால் எரிப்போம் என்று கங்கணம் கட்டும் இந்த அரசாங்கத்துக்கு சொந்த செலவில் சூனியம் செய்வதா? இதட்குமுன்னும் இப்படி ஜனாசாவை எரிப்பது என்றால் பெட்டி வாங்க எத்தனை இலட்சமானாலும் தர ரெடி என்று சொன்னதும் எரிக்கும் செலவை 58000 எங்கள் தலையில் கட்டினார்கள்.இப்பொழுது கத்தார் நாட்டிலோ,மாலைதீவு நாட்டிலோ அடக்கும் செலவு 100 மில்லியன் என்றாலும் தர ரெடி!1 ஜனாசாவுக்கு 2 இலட்சம் என்று சொல்லுவார்கள்.ஜனாசா எரிக்க 5 சதமும் தர மாட்டோம் அதை நீங்களே வைத்து கொள்ளுங்கள் என்று முடிவா சொல்லுவோம்!இந்த 100 மில்லியன் தர முன் வந்த செல்வந்தர்கள் இறப்பவரின் குடும்பத்திற்கு குறைந்தது 1 இலட்சம் கொடுத்தால் எவ்வளவு மேல்?கொடுக்கும் பணம் சதகதுல் ஜாரியா,தன் முஸ்லிம் சகோதரர்க்கு உதவிய நன்மை,பொருளாதார தேவை பூர்த்தி,அல்லாஹ்வின் உதவி,இப்படி எத்தனையோ நல்ல விடயங்கள் அடங்கி இருக்கின்றது.''மறைமுகமான ஸதகா இறைவனின் கோவத்தை தணிக்கும்,கெட்ட மரணத்தில் இருந்து உங்களை பாதுகாக்கும்(நபி மொழி )

Allahu akbar.may allah make things easy.we dont won.t to worry about buried the death body.

நாம் இந்த நாட்டின் மக்கள்.எமது மையத்துக்கள் இங்கு தான் அடக்கம் செய்யப்பட வேண்டும்.அதில் உறுதியாக இருப்போம். மாற்று வழிகளை சிந்தித்தால் பின்னர் இந்த இனவாதிகளினால் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வரும்.

வாழ்வாதார த்துக்கும கட்டார் சாவுக்கும் கட்டாரா?
முஸ்லிம்களின் செல்வத்தை அழிக்கும் திட்டம்

இந்த சிந்தனை தவறு தயவு செய்து நமது நாட்டு உருமையை விட்டுக் கொடுத்துவிட்டு வெளியில் கொண்டு சென்று அடக்கம் செய்யத்தேவையில்லை இந்த தீங்கை செய்பவர்களுக்கு நல்லதை எடுத்து சொல்லி அவர்ரகளை உணரவைப்போம்

இவர்களின் இந்த தீய குணத்தால் கடவுள் இலங்கையை நோக்கி பல வைரஸ்களை அனுப்லாம்

எறித்தாலும் சரி புதைத்தாலும் சரி இது கடவுளின் தண்டனையாக இருந்தால் என்ன செய்யப்போகின்றீர்?

This is a good move..

Let the world to realize the difficulties that we muslims face in our own land..

No only limited number of rich people, every muslims should contribute at their capacity for this project.

Same, time we also should not relive the government from their responsibility to let us enjoy our right (as citizens) of burial in our soil too.

May Allah help us.

Let us act wisely to regain our basic rights as citizens of Sri Lanka.

Please do not publish such idiotic articles.. This is a crazy proposal..

எரிபபதையும் புதைப்பதய்யும் சிந்திக்க இருந்த காலம் ச்ர்வாதிகாரத்தைப் பலப்ப்டுத்தியதோடு போய்விட்டது. இந்த இனவாதத்தை தினமும் திட்டம் தீட்டும் சில பேரே இருப்பார்கள் ஆக சவத்திற் செலவிட நினைப்பவற்றை இனவாதத்தை கக்குகின்றவர்களை கண்டு பிடித்து அவர்கள் பானியில் சூழ்ச்சி மூலம் அவர்களின் பலவீனங்களை அறிந்து அவர்கள் மீது தனித் தனியான சட்ட நடடிக்கைகளுக்காக திட்டமிடுவது காலத்தின் தேவை. முக்கியமான இனவாதிகள் நிம்மதியாக இருக்கும் வரை எம்மை கொடைவ்தை விடவே மாட்டானுங்க. ஜால்ரா போடுர ஒருசில நம்ம மேதைகளும் எக்கேடு கெட்டாலும் கொள்கை பரப்பாளர்களா இருந்தே தீருவோம் என்பது துறோகம். அனுசரித்தே போனலும் விடவே மாட்டானுங்க என்பது தெரிந்த பிரகுமா...?

வெளிநாட்டுக்கு கொண்டு சென்று கொறோனா பரிசோதனை மீன்டும் செய்யப்பட்டு இவர்களின் பொய்கள் நிரூபனமாக்கப் படுமாயின் பரவாயில்லை ஆனால் அதும் முடியாது அப்பொ எதுக்கு ??????

இது விட்டுக் கொடுப்பல்ல சரணாகதி,உரிமைக்காக போராடுவதே சிறப்பு.

Something is better than nothing
அல்லாஹுக்காக விட்டு கொடுப்போம் அல்லாஹ் நல்ல முடிவை தருவான்

இது நிச்சயமாக நடைமுறை சாத்தியமற்ற திட்டம். அப்படியே இந்த செய்தி இனவாத ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் பட்சத்தில் இதை மையமாக வைத்து எமது சமூகத்தின் இருப்புக்கு பாரிய நெருக்கடிகளை உண்டுபண்ணுவர்.

மேலும், உரிய முறையில் நல்லடக்கம் செய்யும் உரிமை மறுக்கப்பட்டால், எரிப்போம் என்ற நிலை தான் என்றால். நாங்கள் ஜனாசகளை கையேட்க முடியாது என்பது தெரிந்தால்.... பெட்டிகள் மற்றும் மின்சாரம் மற்றும் போக்குவரத்து செலவு என்று அவர்கள் கேட்கும் பணம் எம்மிடம் இல்லை என்று மறுத்து விடுங்கள். 50,000 அல்ல 500 ரூபாய் கூட இல்லை, உயிரோடு உள்ளவர்களுக்கு உணவுக்கு கூட காசு இல்லை என்று சொல்லி விடுங்கள்.

எங்களது உறவுகளின் உணர்வுகள் எம்மிடம் உள்ளது, தொழுகை செய்து, பிரார்த்தித்து பிரதி வெள்ளிக்கிழமை தோறும் அனைத்து பள்ளிகளிலும் ஜனாஸா தொழுகை செய்யுங்கள்.

அந்த 50,000 இல்லாமல் அவர்கள் என்ன செய்கிறார்கள் எப்படி எத்தனை நாளைக்கு முடிகிறது என்று பார்ப்போம்.

வழக்கு தொடர்ந்தால் கூச்சமில்லாமல் சொல்லுங்கள் அந்த அளவுக்கு வசதி இல்லை, என்னை நம்பி யாரும் இப்போதைக்கு அவ்வளவு பெரிய தொகை கடன் தரமாட்டார்கள் என்று.

Not a wise idea, please give up this stupid idea

எங்களான்டான ஒரு பக்கம் திசை திருப்ப மட்டும் ரெடியா இருக்காங்கப்பா என்னடா இது வாழ்ரதுக்கு ஒரு இடம் புதைக்கிரதுக்கு

Post a comment