Header Ads



முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்வதை அமைச்சரவை ஆராய்ந்ததா...? சுகாதாரக் குழு பரிந்துரைத்தால் மாத்திரமே அனுமதி


கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தலைமன்னாரில் புதைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில நிபுணர்கள் வெளியிட்ட கரிசனைகளை கருத்தில் கொள்ளும்போது தலைமன்னாரே பொருத்தமான இடமாக தோன்றுகின்றது என அரசவட்டாரங்கள் தெரிவித்துள்ளன

கடந்த வாரம் இது குறித்து அமைச்சரவையில் ஆராய்ந்தவேளை அனேகமான அமைச்சர்கள் இதளைன ஏற்றுக்கொண்டனர் என அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முதலில் கொழும்பில் உள்ள முஸ்லீம் மையவாடியில் கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டவேளை அனேக அமைச்சர்கள் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையால் இனபதட்டம் ஏற்படலாம் என பல அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தலைமன்னாரில் உடல்களை புதைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார நிபுணர்கள் குழுவொன்றிடம் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறிப்பிட்ட குழுவினர் பரிந்துரை செய்தால் மாத்திரமே அரசாங்கம் தலைமன்னாரை பயன்படுத்தும் என தெரியவருகின்றது.

1 comment:

  1. What the hell is ministry of Health???.
    They Do not follow WHO ?
    They Do Not Follow UNO?
    They DO not Follow International Scientist advise?
    What the hell are they thinking they are ???

    Ministry of Health is also under government.

    They are Under President and Prime Minister.
    All Drama, Racist Drama. Revenging... Very very shame. Its not healthy for the future of Peaceful SriLanka.

    ReplyDelete

Powered by Blogger.