Header Ads



திருகோணமலை மக்களுக்கு இம்ரான், Mp யின் அவசர அழைப்பு


கடந்த 2020.10.02 ஆம் திகதிய 2196 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானிப் பத்திரிகையில் திருகோணமலை மாவட்டத்தின் பின்வரும் காணிகளை பௌத்த சமய நடவடிக்கைகளுக்காக நீண்ட காலக் குத்தகைக்கு வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான ஆட்சேபனைகள் இருப்பின் குறித்த திகதியில் இருந்து 6 வார காலங்களுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தனக்கு  தெரிந்த வரை இக்காணிகள் தற்போது பொதுமக்களால் பராமரிக்கப்பட்டு வருபவை. எனவே, இக்காணி தொடர்பான ஆவனங்கள் ஏதும் இருப்பின் அது தொடர்பான பிரதிகளை ஆட்சேபனை தெரிவிப்பதற்கு எனக்கு தருமாறு கேட்டுக் கொள்வதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சம்மந்தப்பட்டவர்களை கேட்டுள்ளார்.

இது தொடர்பில் இன்று (10) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது.

அதேபோல தற்போது காணியை பராமரிப்போர், சமூகநல அமைப்புகளும் தாமதமின்றி இந்த ஆட்சேபனையைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கட்சி பேதங்களுக்கு அப்பால் சமூக நலன் கருதி இந்த விடயத்தில் ஒன்றுபடுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இயன்றவரை இந்த தகவலை அதிகம் பகிருங்கள் 

காணிகள் விபரம்:

1. புல்மோட்டை 1 கி.உ பிரிவில் எப்.வி.பி 30 ஆம் இலக்க வரைபடத்தின் 1147 வது காணித்துண்டு

2. புல்மோட்டை 3 கி.உ பிரிவில் எப்.ரி.பி 12 ஆம் இலக்க வரைபடத்தின் 1460 வது காணித்துண்டு

3. புல்மோட்டை 1 கி.உ பிரிவில் எப்.ரி.பி 12 ஆம் இலக்க வரைபடத்தின் 1436 வது காணித்துண்டு

4. புல்மோட்டை 1 கி.உ பிரிவில் எப்.வி.பி 30 ஆம் இலக்க வரைபடத்தின் 1139 வது காணித்துண்டு

5. தென்னமரவாடி கி.உ பிரிவில் எப்.ரி.பி 12 ஆம் இலக்க வரைபடத்தின் 1446 வது காணித்துண்டு

6. திரியாய் கி.உ பிரிவில் எப்.வி.பி 31 ஆம் இலக்க வரைபடத்தின் 46 வது காணித்துண்டு

7. கும்புறுப்பிட்டி கிழக்கு கி.உ பிரிவில் டொப்போ பி.பி 37 ஆம் இலக்க வரைபடத்தின் 3281 வது காணித்துண்டு

2 comments:

  1. Government action like this, is very clear that they do not NOT Care the life and rights of the people of this area. Rather they should meet the people and support their life earning agriculture and not snatching the harvesting land from people for different agenda of the racists.

    ReplyDelete
  2. தயவு செய்து சம்பந்தருடனும் பேசுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.