Header Ads



வீரவன்ச - ரஞ்சன் இடையில் கடும் வாதப்பிரதிவாதம்


கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோருக்கு இடையில் நேற்று நாடாளுமன்றத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

நீதிபதிகள் மத்தியில் தமது செல்வாக்கை ரஞ்சன் ராமநாயக்க செலுத்தினார் என்ற குற்றச்சாட்டை வீரவன்ச சுமத்தினார்.

அத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்தா சில்வாவுக்கு மரண தண்டனை விதித்த மூன்று நீதிபதிகளை கொண்ட அமர்வின் உறுப்பினராக இருந்த பத்மினி ரணவக்கவுடன் ரஞ்சன் ராமநாயக்க உரையாடினார் என்று குற்ற்சாட்டையும் அவர் முன்வைத்தார்.

இதன்போது ரஞ்சன் ராமநாயக்க, தாம் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் பதிவை நாடாளுமன்றத்தில் இயக்கத்தொடங்கினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரது மனைவிமார்களுடன் தாம் மேற்கொண்ட உரையாடல்களின் பதிவுகள் தம்மிடம் இருப்பதாக தெரிவித்த அவர் அவற்றை சமர்ப்பிக்கப்போவதாக குறிப்பிட்டார்.

முன்னைய சந்தர்ப்பங்களில் அவற்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கமுடியவில்லை என்று அவர் கூறினர்.

இதன்போது இருவருக்கும் இடையில் தீவிரமான வார்த்தை பிரயோகங்களும், குற்றச்சாட்டுகளும் பரிமாறப்பட்டன.

No comments

Powered by Blogger.