Header Ads



சர்வதேச ரீதியாகவும் எமது ஆதரவு தொடரும் - சீன பிரதிநிதிகள், ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை உட்பட அனைத்து சர்வதேச அமைப்புகளிலும் இலங்கையின் இறைமை சுதந்திரம் ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு முழுமையான ஆதரவை தொடர்ந்தும் வழங்கப்போவதாக சீனா உறுதியளித்துள்ளது.


இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனா உயர்மட்டக்குழுவினர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடனான சந்திப்பின்போது இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளனர்.

இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது சீன ஜனாதிபதியின் முன்னுரிமைக்குரிய விடயம் என சீன பிரதிநிதிகள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளனர்.


இலங்கை தனது அபிவிருத்தி முயற்சிகளில் வெற்றியடைவதற்கு சீனா தொடர்ந்தும் தனது ஆதரவை வழங்கும் என சீன பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.

இலங்கையுடனான இரு தரப்பு உறவுகளை அபிவிருத்தி செய்வதை சீனா முன்னுரிமைக்குரிய விடயமாகியுள்ளது என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றுள்ள சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சீனா சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கான திட்டம் உள்ளது எனவும் சீனா பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தேச அம்பாந்தோட்டை கைத்தொழில் வலய திட்டத்தினை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் சீனா பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் இலங்கை ஜனாதிபதி சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வார் என சீன பிரதிநிதிகள் குழுவினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

3 comments:

  1. WITHIN 10YEARS SRILANKA BELONGS TO 🇨🇳 CHINA.THEN THOSE WHO HAVE FUAL CITIZENSHIP THEY WILL DEPART FROM SRILANKA.THEN BUDDHIST MONK WILL SHOUT ONLY APE RATE APE RATE.ALLAHDA KAWal

    ReplyDelete
  2. WITHIN 10YEARS SRILANKA BELONGS TO 🇨🇳 CHINA.THEN THOSE WHO HAVE DUAL CITIZENSHIP THEY WILL DEPART FROM SRILANKA.THEN BUDDHIST MONK WILL SHOUT ONLY APE RATE APE RATE.ALLAHDA KAWal

    ReplyDelete
  3. சீன அணியில் இலங்கை சேர்ந்துஙிட்டது. இது அமேரிக்க, ஐரோப்பிய, இந்திய, ஜப்பான் கூட்டணிக்கு எதிராக கொள்கை.

    எனவே, வருங்காலத்தில் உலக அரங்கில் நல்ல கூத்து பார்க்லாம்.

    ReplyDelete

Powered by Blogger.