Header Ads



தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோருக்கு 6 மாதங்கள் சிறை



இன்னும் இரு தினங்களில் புதிய சுகாதார படிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியிடப்பட உள்ளதென தெரிவிக்கும்  சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி, அதன்படி தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோர் ஆறு மாத சிறைத்தண்டனைக்கு ஆளாகுவர் எனவும் தெரிவித்தார். 

இந்நாட்டின் மக்களை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் பல்வேறு சட்டதிட்டங்களை அமுல்படுத்த உள்ளதாகவும், அதன்படி சுகாதா​ர சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுருத்தலின் பேரில் தொற்றுநோய் பரவல் காணப்படும் பகுதிகளில் உரிய சட்டதிட்டங்களை பின்பற்ற தவறுவோருக்கு ஆறுமாத சிறைத் தண்டனையை வழங்கும் சட்டமொன்றும் அமுல்படுத்த உள்ளதென அவர் அறிவித்துள்ளார். 


குறிப்பாக முகக் கவசம் அணியாதவர்கள், நோய்த் தன்மையை அறிந்துகொள்ள முன்வராதவர்கள், சமூக இடைவெளியை பேணத் தவறியவர்கள் ஆகியோருக்கு எதிராகவே இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இந்தச் சட்டங்களை மீறினால் 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமாக அறவிடப்படுமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

1 comment:

  1. உலக சுகாதார நிறுவனத்தின் நெறிப்படுத்துதல்களுக்கு அமைவாக; அவற்றை ஏற்று; ஏனைய நாடுகளைப் போன்றும் இலங்கையில் கொரணா அல்லது Covid19னை எதிர்ததுப் போராடி மக்களைப் பாதுகாப்பதற்காக எமது அரசு முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியினைப் பேணுதல், திருமணம போன்ற சமூக நிகழ்வுகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையினரை மாத்திரம் அனுமதித்தல், மரணச் சடங்குகளுக்குக்கூட மிகக் குறைந்த தொகையினரை அனுமதித்தல் மற்றும் கோயில்களை நீண்ட காலத்திற்கு பூட்டி வைத்தல் அத்தோடு முக்கியமாக வணக்க வழிபாடுகளுக்கு 50 பேரை மாத்திரம் ஒரு தடவையில் அனுமதித்தல் போன்ற பல முக்கிய அறிவுறுத்தல்களை கடைப்பிடித்தமையின் காரணமாதகத்தான் கோவிட்19ஐ நாட்டில் இருந்து ஓரளவுக்காவது அகற்ற முடிந்தது.

    மேன்மை தங்கிய சுகாதார அமைச்சரின் அறிவுறுத்தல் மிகவும் சந்தோசமான செய்தியினை முஸ்லிம்களாகிய எமக்கு வழங்குவதையிட்டு நாம் பெருமைப்படாமல் இருக்க முடியாது. "எவராவது ஒருவர் கோவிட்19ற்கான விதிமுறைகளைப் பின்பற்றத் தவறுமிடத்து அவரகளுககு ரூபா பத்தாயிரம் அபராதம் விதிக்கப்படும்"; என்பதாக அறிவித்துள்ளார்கள். என்னதான் இருந்தபோதிலும் அவரகள் ஒரு தாய். தாய் என்றாலே இரக்க சுபாவமிக்கவரகள் என்றுதானே அர்த்தப்படும். அவரகளைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இனத்துவேசம் பாரியளவில் முஸ்லிம்களை துன்புறுத்துகின்றது என்று முஸ்லிம்கள் எண்ணிக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அம்மா அவரகள் முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சிகரமான சந்தர்ப்பததை அளித்தமைக்கு முஸ்லிம் மக்கள் சார்பாக அம்மையார் அவரகளுக்கு என் இதயம் கனிந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும் ஏனைய முஸ்லிம் அமைப்புகளும் தனிப்பட்ட முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் தனவந்தர்கள் ஏன் Jaffna Muslim ஆகியோர்களும் அம்மையார் அவரகளுக்கு பிரத்தியேகமாக நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

    ReplyDelete

Powered by Blogger.