Header Ads



20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம், பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்


20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் 91 மேலதிக வாக்குகளை பெற்று பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் இடம்பெற்றது. 

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.