Header Ads



பேராதனை வைத்தியசாலை வேலைத்திட்டம் தொடர்பாக Dr சலாஹுதீனுடனான சந்திப்பு


பேராதனை வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவுக் கட்டடம் தொடர்பில் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைத்தியர் சலாஹுதீன் அவர்களது குரல் பதிவு ஒன்று வெளியானது.

இந்தக் குரல் பதிவு சம்பந்தமாக கந்த உடரட்ட முஸ்லிம்களின் ஒன்றியம் மற்றும் கண்டி மாவட்ட பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் முக்கிய உறுப்பினர்கள் வைத்தியர் சலாஹுதீன் அவர்களுடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டனர்.

இந் நிகழ்வில் மெளலவி.எச். உமர்தீன்(ரஹ்மானி), மெளலவி.அப்துல் கப்பார்(தீனி), மெளலவி.எம்.எச்.எம். லபீர்(முர்ஸி), மெளலவி.ஹஸன் ரியாஸ்(அப்பாஸி), கண்டி மாவட்ட பள்ளிவாயல்கள் சம்மேளனம் சார்பில் அல்ஹாஜ். K.R.A சித்தீக் மற்றும் அல்ஹாஜ் N.M.M மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தனது மருத்துவ அனுபவங்கள் மற்றும் குடும்பங்களுடனான தொடர்புகளின் போது சமூகத்தில் காண்கின்ற பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் அவருக்கு இருக்கின்ற ஆதங்கத்தின் அடிப்படையில் தனது தனிப்பட்ட கருத்தாக உணர்வுபூர்வமாக அவற்றை வெளியிட்டதாகவும் உலமாக்கள் தொடர்பிலும் குறித்த நிறுவனங்கள் தொடர்பிலும் அவப்பெயரை ஏற்படுத்தும் எண்ணத்தில் வெளியிடப்பட்ட ஒன்றல்ல என்பதையும் தெளிவுபடுத்தினார்.

மேலும் அவர் குறிப்பிட்டுள்ள சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் நிறுவனங்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களும் தெளிவுபடுத்தப்பட்டது.

இந்த வைத்தியசாலை வேலைத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க விரும்புகின்றவர்கள் ஆதரவு தெரிவிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்பதையும் வைத்தியர் இதன்போது தெரிவித்தார்.

மனிதாபிமான அடிப்படையில் பல்வேறு வழிகளிலும் நாம் அனைவரும் மேற்கொள்ளும் முயற்சிகளை இறைவன் அங்கீகரித்து அனைவரையும் இந்த சமூகத்திற்காகவும் நாட்டுக்காகவும் உழைக்கக் கூடியவர்களாக ஆக்கி வைப்பானாக.

3 comments:

  1. நான் அறிந்த வகையில் நலன்புரி நிறுவனத்தை போன்றே வைத்தியரும் இனம் மதம் பாராது சமுக சேவைகளில் இடுபடுபவர். பெரியளவு வேலைத்திட்டங்களை அரசாங்கமானது தனியாகவோ வேறு நாடுகளின் உதவினாலோ நிறைவேற்றிக்கொள்ளலாம்.ஆனால் இன்று சமுகத்தில் வேலை வாய்ப்பற்றவர்கள் வறுமையினால் திருமண முடிக்காத பெண்களின் வீகிதம் அதிகரித்து கொண்டே செல்வதை காணக்கூடியாதாக உள்ளது. கூடுதலான சமுக சிறிய பாடசாலைகளை ஆராய்ந்தால் 3 வேலை சாப்பிட முடியாத மாணவர்களின் தொகையை அறிந்து ஆதிர்ச்சியான சந்தர்ப்பம் பல பேருக்கு உண்டு.பல பாடசாலைகள் சென்று பார்த்தால் பல பெளதிக குறைபாடுகள், விஞ்ஞான ஆய்வு கூட வசதி இல்லை, கணணிப பாடம் கட்டாயப்படுத்தியும் 1 கணணிகளும் வேலை செய்யாத பாடசாலைகள் பல, விளையாட்டு மைதானம் இல்லை, உடைந்த நிலையில் மலசலகூடங்கள், ......வைத்தியரின் கருத்து உண்மையே. மாட்டு இறைச்சிக்கு கூரல் கொடுக்கும் அளவிற்கு கூட சமுக பாடசாலை வளஙௌகளில் அபிவிருத்தியில் கூரல் கொடுக்கும் நபர்களின் அளவு மிக குறைவு.

    ReplyDelete
  2. Insha Allah; Ameen Yaa' Rabbil Aalameen.

    ReplyDelete
  3. THE POINT MADE BY THE DOCTOR HAS NOT BEEN UNDERSTOOD BY THE ORGANIZERS.I STILL BELIEVE THAT THIS PROJECT IS NOT NECESSARY CONSIDERING THE PLIGHT OF OUR COMMUNITY SPECIALLY AROUND KANDY AREA.
    PLEASE PUBLISH THE OTHER CHARITY EVENTS UNDERTAKEN BY THE SAME ORGANIZERS.

    ReplyDelete

Powered by Blogger.