Header Ads



குவைத்தில் இலங்கை மாணவனின் மகத்தான சாதனை



2020 ஆம் கல்வியாண்டுக்கான  குவைத் பல்கலைக்கழக அனுமதி உயர்தரப்  பரீட்சையில் இம்முறை அதி கூடிய புள்ளிகளை பெற்று இலங்கை மாணவன் சாதனை படைத்து தனது தாய் நாட்டுக்கும், குவைத் வாழ் இலங்கை சமூகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.


குவைத் குர்துபா இஸ்லாமிய கல்லூரியில் கல்வி பயின்ற நீர்கொழும்பு, பலகத்துறையைச் சேர்ந்த அல்-பலாஹ் கல்லூரியின் முன்னாள் மாணவன் A.R. முஹம்மத் ரிஸ்னி, 97.5% புள்ளிகளைப் பெற்று குவைத் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி உள்ளார்.

 

குவைத் உயர் கல்வி அமைச்சின் கீழ், கடந்த பல தசாப்த காலமாக வழங்கப்பட்டுவரும் புலமைப் பரிசில் திட்டத்தின் ஊடாக இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட  இலங்கை மாணவர்கள்  சிறப்பான முறையில் சித்தி எய்து தமது கலைமானி, முதுமானி பட்டங்களை முடித்துவிட்டு குவைத்திலும் வெளி நாடுகளிலும் உயர் பதவிகளை வகித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.


இவரது ஒளிமயமான எதிர் காலத்துக்கு தமது நல்லாசிகளை தெரிவித்துக் கொள்வதில் குவைத் வாழ் இலங்கை முஸ்லிம் சமூகமும், குவைத் அல்-இஹ்ஸான் நலன்புரிச் சங்கமும் (AIWA), முன்னோடி ஊடகக் குழுமமும் பூரிப்படைகின்றது. நாமும் வாழ்த்துவோம்!

No comments

Powered by Blogger.