September 30, 2020

திருமணத்திற்கு பரிசு கொடுக்கும் போது, நூலொன்றையும் சேர்த்து கொடுப்பது நல்லது - என்.எம்.அமீன்


எழுத்தாளரும் ஊடகவியலாளருமான காலி ஏ.ஸீ.எம்.ஜிப்ரி எழுதிய 'சிறுகதை தொகுப்பும் யாழ்நினைவுகளும்' சிறுகதை தொகுப்பு நூல் வௌியீட்டு விழா   காலி மழ்ஹறுஸ்ஸுல்ஹியா தேசிய பாடசாலை மண்டபத்தில் அண்மையில்  நடைபெற்றது. பிரதம அதிதியாக    நவமணி பிரதம ஆசிரியரும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான என்.எம்.அமீன் , கலந்து சிறப்பித்தார்.பாடசாலை அதிபர் ஜ.எம்.எம்.யூசுப் விழாவுக்கு தலைமைவகித்தார். பாடசாலை பழைய மாணவரும் வர்த்தகருமான சமூக சேவகர் ஹஸன் சரீப்  விசேட அதிதியாக கலந்து கொண்டு  நூலின் முதற்பிரதியை பெற்றார். இந்த நிகழ்வில் கலைவாதிக் கலீல்,ஹாபிஸ் இஸ்ஸதீன் ஆகியோர் நூழாய்வு செய்தார்கள்.  

  கலைவாதிக் கலீல்  

''மிகச் சிறந்த எழுத்தாளர்கள் தென்னிலங்கையில் இருந்து உருவாகி இலக்கிய தடம்பதித்திருக்கிறார்கள்.இன்று இலக்கியத்துறையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.நீண்டகாலத்தின் பின்னர் தெற்கிலிருந்து நூலொன்று வௌிவருகிறது.பழைய நிலை மீண்டும் உருவாக வேண்டும்' ஜிப்ரியின் சிறுகதைகளின் எளிமையான போக்கு,எழிமையான நடை என்பன சிறப்பாக இருப்பதாக பாராட்டினார்.


பிரதம அதியாக கலந்து கொண்ட என்.எம்.அமீன்  

முன்னாள் கல்வி அமைச்சர் பதியுதீன் மஹ்மூத்.கலாநிதி சுக்ரி,,முக்தார் ஏ மொஹமட்,  போன்றோர் கல்வி எழுச்சி ,இஸ்லாமிய அறிவை மேம்படுத்த  பங்களித்தார்கள்.சிறந்த எழுத்தாளர்களான எம்.எச்.எம்.ஷம்ஸ்,திக்குவல்லை கமால்திக்குவல்லை ஹம்ஸா என நீழும் பட்டியலுக்கு இன்று என்ன நடந்தது  தமது சமூகத்தை பற்றிய எழுத்துக்கள் எல்லா இடங்களிலும் வௌிவருகின்றன. ஆனால் எமது சமூகத்தின் வாசிப்பு பழக்கம் பூச்சியமாக இருப்பது இவ்வாறான பின்னடைவிற்கு முக்கிய காரணம்.முஸ்லிங்களுக்கான பத்திரிகைகள் மூடுவிழா காணும் நிலையை எதிர்கொண்டுள்ளன.

 திருமணத்திற்கு பரிசு கொடுக்கும் போது நூலொன்றையும் சேர்த்து கொடுப்பது நல்லது  .

அரும்பு ஆசிரியரும் எழுத்தாளருமான ஹாபிஸ் இஸ்ஸதீன்

வாசிப்பின் முக்கியத்துவத்தை  எமது சமூகம் மறந்துவிட்டது.வீடுகள் தோரும் பழைய பொருட்களுக்கு அலுமாரி இருந்தாலும் புத்தக அலுமாரி கிடையாது  

மாணவர்கள் ஒருபக்கமிருக்க ஆசரியர்கள் கூட இன்று புத்தகங்கள் வாசிப்பதில்லை.நவீன தொழில்நுட்ப கருவிகள் வந்தாலும் பத்திரிகையை ,சஞ்சிகையை கையிலெடுத்து வாசிக்கும் திருப்தி எதிலும் வராது  .ஜிப்ரி ஆசிரியரின் புகைப்படக் கருவியொன்று இருந்தது. அதனை எனக்கு மாத்திரம் தான் பயன்படுத்தத் தந்தார் நான் இன்று சிறந்த புகைப்படக் கலைஞராக மாற இது அடித்தளமிட்டது .

 இந்த நிகழ்வில் ஜிப்ரி ஆசிரியரின் மாணவர்கள்.(இன்று அதிபர்கள்.ஆசிரியர்கள்),காலி மாவட்ட பாடசாலை அதிபர்கள்.இலக்கிய ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள் . நவமணி ஆசிரியர் என்.எம்.அமீன்,பாடசாலை பழைய மாணவர் சங்கமும் அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தது. அதிபர் சங்கம் சார்பில் அவருக்கு நினைவுப் பரிசில் வழங்கப்பட்டது.

1 கருத்துரைகள்:

Kamasutra book is best newly married couples.

Post a comment