Header Ads



மாகாண சபை முறைமையை ஒழிக்க வேண்டும்



மாகாண சபைத் தேர்தல் மற்றும் அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பாக தற்போது பேசப்பட்டு வருவதால், அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளதாலும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மாகாண சபை முறைமையை ஒழிக்க வேண்டும் என ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற சமய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.

தற்போது சில அரசியலமைப்புத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. எந்த அரசியலமைப்புச் சட்டத்தின்படியும் எந்த தலைவரும் சரியாக செயற்படவில்லை. மகிந்த ராஜபக்ச மூன்று தசாப்தங்களாக இருந்து வந்த போரை முடிவுக்கு கொண்டு வந்தார். நிறைவேற்று அதிகாரம் காரணமாகவே அவர் அதனை செய்ய முடிந்தது. எனினும் 19வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட நபருக்கு எதனையும் உரிய நேரத்தில் செய்ய முடியாமல் போனது.

19வது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்து 20வது திருத்தச் சட்டத்தை கொண்டு வரவுள்ளனர். சிறந்த நபரிடம் இந்த அரசியலமைப்புச் சட்டம் சென்றால் நல்லது. கோட்டாபய ராஜபக்ச கெட்டவர் எனக் கூறவில்லை. காரணம் கோட்டாபய ராஜபக்ச இராணுவத்தில் கடமையாற்றிய அதிகாரி. அவர் இந்த நாட்டை நேசிக்கின்றார். இது எனது இதனை பாதுகாக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும்.

இதனால், அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய அதிகாரங்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு கிடைத்தால் பரவாயில்லை. அவர் ஜனாதிபதியாக இருக்கும் வரையில் நல்லது. எனினும் சில நேரம் மூளையில்லாத ஒருவருக்கு சென்றால் என்ன நடக்கும் என்பதை எண்ணிப்பார்க்க முடியாது. அப்படியான நபருக்கு அதிகாரம் கிடைத்தால் நாடும், அழிந்து விடும், நாட்டின் பிள்ளைகளும் அழிந்து விடுவார்கள்.

அதேவேளை கடந்த இரண்டு ஆண்டுகளாக எவரும் மாகாணங்களை ஆட்சி செய்யவில்லை. நிர்வாகம் நடந்துக்கொண்டிருக்கின்றது. இதனால் மாகாண சபை எமக்கு தேவையா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். எமக்கு மாகாண சபைகள் தேவையில்லை. அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளதால், மாகாண சபைகளை இரத்துச் செய்ய தலையிட வேண்டும். மாகாண சபைகளை ஒழிப்பது நல்லது எனவும் சீலரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.