Header Ads



முஸ்லிம் காங்கிரசுக்கு தேசியப்பட்டியல் எம்பி பதவி வழங்கப்பட்டால் அதற்கு பொருத்தமானவர் யார் ?

- முகம்மத் இக்பால் -

நடந்துமுடிந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த பின்னடைவு காரணமாக தோழமை கட்சிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக தேசிய பட்டியல் மூலம் கிடைக்க இருந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெறுவது கேள்விக்குறியாக உள்ளது.

அவ்வாறு மு.காங்கிரசுக்கு கிடைக்கப்பெற்றால் அது யாருக்கு, எந்த பிரதேசத்துக்கு வழங்குவதன் மூலம் கட்சியை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லும் என்றும் ஆராய்ந்து வழங்குவதுதான் நியாயமாகும்.

அவ்வாறு கட்சியின் வளர்ச்சியைவிட தனிப்பட்ட கடமைப்பாட்டுக்காகவோ அல்லது அழுத்தத்தின் பேரிலேயோ அல்லது எடுபிடிகளை திருப்திப்படுத்துவதற்காகவோ வழங்குவது எதிர்காலத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு எந்தவித பங்களிப்பினையும் வழங்காது.

அந்தவகையில் மு.கா முதன்முதலாக போட்டியிட்ட 1989 லிருந்து தொடர்ச்சியாக வன்னி மாவட்டத்திலிருந்து பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்றது. அத்துடன் 2001 இல் முஸ்லிம் காங்கிரசுக்கு இரண்டு பிரதிநிதித்துவம் கிடைக்கபெற்றது.

ஆனால் நூர்தீன் மசூரின் மரணத்துக்கு பின்பு அவரது இடத்துக்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரின் பலயீனத்தாலும், செயல்பாடுகள் இல்லாத மந்தநிலை காரணமாகவும் வன்னி மாவட்டத்தில் மு.கா கட்டமைப்பு பலயீனமடைந்ததுடன், ஒவ்வொரு தேர்தலிலும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்துகொண்டு வருகின்றது.

இந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரசின் வன்னி மாவட்ட பிரமுகர்கள் கட்சியால் நிறுத்தப்பட்ட வேட்பாளர் ஹுனைஸ் பாரூக்கை எதிர்த்து மாற்றுக் கட்சிக்காரரான காதர் மஸ்தானுக்கு வேலை செய்ததனையும் காணக்கூடியதாக இருந்தது.

அவ்வாறிருந்தும் கழுத்தருப்புக்கு மத்தியில் ஹுனைஸ் பாரூக் அவர்கள் 12,041 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார். வன்னி மாவட்ட வரலாற்றில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய விருப்புவாக்கு இதுவாகும்.

இந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் இரண்டு பிரதிநிதிகளும், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலிருந்து தலா ஒவ்வொரு பிரதிநிதிகளும் வெற்றிபெற்றதன் காரணமாக தேசியப்பட்டியலை கிழக்கு மாகாணத்து வழங்கவேண்டிய அவசியமில்லை.

அத்துடன் முஸ்லிம் காங்கிரசுக்கு கணிசமான வாக்குகளை தொடர்ந்து வழங்கிவருகின்ற குருநாகல் மாவட்டத்திலும் நீண்டகாலமாக பிரதிநிதித்துவத்தின் அவசியம் உணரப்பட்டு வருகின்றது. அங்கு இந்த தேர்தலில் ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்கள் 48.413 வாக்குகளை பெற்றிருந்தார்

எனவே முஸ்லிம் காங்கிரசுக்கு தேசியப்பட்டியல் மூலம் பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்றால் அதனை வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கட்சியின் வளர்ச்சியின் நண்மை கருதி வன்னி மாவட்டத்துக்கு முதல் பகுதியையும், குருநாகல் மாவட்டத்துக்கு இரண்டாவது பகுதியாகவும் பிரித்துக்கொடுப்பதுதான் நியாயமாகும்.

இதன் மூலம் இரண்டு மாவட்டங்களிலும் உள்ள ஏராளமான முஸ்லிம் கிராமங்களை பிரதிநிதித்துவம் செய்ய முடியும்.   

3 comments:

  1. இவ் ஆலோசனை மிகவும் சரியானதும் பொருத்தமானதுமாகும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இருக்கின்றது. வன்னியில்கூட ரிசாத் அவரகள் இருக்கின்றார்கள். ஆனால் குருநாகலில் யாரும் இல்லை. எந்தவகையிலும் முஸ்லிம் பிரதிநித்துவம் இல்லாத பிரதேசத்திற்கு முன்னுரிமை வழங்கி அப்பிரதேசத்தை சேர்ந்தவருக்கு அதனைக் கொடுப்பதே நீதியும் நியாயமுமாகும. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் அதனைச் செய்யாது. ஏனெனில் அதன் எடுபிடிகள் அதனைச் செய்யவிடமாட்டார்கள். அதுதான் வரலாறு.

    ReplyDelete
  2. தேசியத் தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவின் பின் முஸ்லிம் காங்கிரஸுக்குப் பொறுத்தமான அல்லது அந்த இயக்கம் சார்பாக பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்த யாரும் பொறுத்தமாகத் தெரியவில்லை என்பது தான் யதார்த்தம். முன் வரும் யாரைப் பார்த்தாலும் சுயநலமும் பதவி ஆசையும் தவிர வேறு எதுவும் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

    ReplyDelete
  3. தலைவர்ர அவருக்கு இல்லையா?

    ReplyDelete

Powered by Blogger.