Header Ads



பள்ளிவாசலுக்கு வருவோர் வெள்ளிக்கிழமை உட்பட, சகல தினங்களிலும் ஹெல்மட் அணிய வேண்டும்


பள்ளிவாயலுக்கு வணக்க வழிபாடுகளுக்கு வருகை தருவோர் வெள்ளிக்கிழமை உட்பட அனைத்து தினங்களிலும் தலைக்கவசம் அணிந்து வர வேண்டுமென்ற அறிவுறுத்தலை பள்ளிவாயல்கள் ஊடாக விடுக்குமாறு கோரி வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பெரமுன ஒப்பமிட்டு அனைத்து பள்ளிவாயல்களுக்கும் வேண்டுகோள் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். 


அதில் கோரப்பட்டுள்ளதாவது, பள்ளிவாயல்களுக்கு வருவோர் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வருவதுடன், நாட்டின் போக்குவரத்து சட்டங்களைப் பேணி நடக்க வேண்டுமென்பதுடன் மீறுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த அறிவித்தல் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள முஸ்லீம் பிரதேசங்களான வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீறாவோடை, பிறைந்துரைச்சேனை, மாவடிச்சேனை, காவத்தமுனை, செம்மண்ஓடை, பதுரியா, மாஞ்சேலை, தியாவட்டுவான் போன்ற கிராமங்களில் உள்ள பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கி முலம் அறிவ்தல் செய்யப்பட்டது. 


-மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்-

2 comments:

  1. சட்டத்தை மதிக்காதவனுக்கு சமயக்கிரிகைகள் எதற்கு? வெட்கக்கேடு.

    ReplyDelete
  2. there is no any relation with helmet and the religious obligations... its personal mater should be handled under the traffic regulations...

    ReplyDelete

Powered by Blogger.