Header Ads



பௌத்த தேரரின் முகத்தில் கடிதத்தை வீசிய ரணில் - மஹிந்தவுடன் 14.000 தேரர்கள் உள்ளனர்


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு, ரணில் விக்ரமசிங்கவை தாம் கேட்டுக் கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. 

எனினும் தமது கோரிக்கையை ரணில் விக்ரமசிங்க நிராகரித்தாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிக்குகள் முன்னணியின் பிரதம செயலாளர் கீனியாவல பாலித்த தேரர் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ´கடந்த 26 வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவால் எதனையும் செய்ய முடியவில்லை. அவர் எடுத்த பிழையான தீர்மானங்களே இன்றைய நிலைக்கு காரணம். நாம் அவருடன் தனியாக பேசினோம். ஏம்மால் கையளிக்கப்பட்ட கடிதத்தை அவர் போபிட்டிய தேரரின் முகத்தில் வீசி அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என கூறினார். 

ஆகவே, அவ்வாறான தலைவருடன் எப்படி முன்நோக்கி பயணிப்பது? ரணிலால் எதிர்காலத்தில் 10 தேரர்களின் ஆதரவை கூட பெற முடியாது. மஹிந்தவுடன் 14,000 தேரர்கள் உள்ளனர். காரணம் அவர் தேர்களை கௌரவப்படுத்துகின்றார்´ என்றார்.

2 comments:

  1. உங்களை மதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அதற்காக மடிக்குள் கூட்டி வைக்க மானமுள்ளவன் விரும்ப மாட்டான். மற்றத் தரப்பினருக்கு அத இல்லாமலிருக்கலாம்.

    ReplyDelete
  2. மானத்தை ரணிலிடம் காண்பது வெறும் கற்பனையாகும்

    ReplyDelete

Powered by Blogger.