Header Ads



இன, மத, வேறுப்பாடின்றி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுப்படும் சூழலை உறுதிப்படுத்துவேன்: மஹிந்த

(இராஜதுரை ஹஷான்)

வியாபாரிகள் இனம், மதம், வேறுப்பாடின்றி சுதந்திரமான முறையில் வர்த்தக  நடவடிக்கைகளில் ஈடுப்படுவதற்கான சூழலை புதிய அரசாங்கத்தில் உறுதிப்படுத்துவேன். நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் சமவுரிமை உள்ளது. என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

 கொழும்பில் இன்று இடம்பெற்ற  வர்த்தகர்களுடனான  சந்திப்பின் போது பிரதமரால் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி பதவி வகித்த  காலக்கட்டத்தில் நாட்டில் வர்த்தகத்துறையில் காணப்பட்ட நெருக்கடிகளுக்கு பேச்சுவார்த்தைகளின் ஊடாக  தீர்வு வழங்கப்பட்டது. தேசிய பொருளாதாரத்தில் வர்த்தகத்துறை பாரிய பங்களிப்பு செலுத்துகின்றது.  அனைத்து இன மக்களும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுப்பட்டார்கள். அனைத்து  தரப்பினரது, வியாபார நடவடிக்கைளும் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்பட்டது.

 2015ம்  ஆண்டு  ஆட்சி மாற்றத்தின் பின்னர் பொருளாதாரம் சடுதியாக வீழ்ச்சியடைந்தது.  இதனால்  வர்த்தகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டார்கள்.  முறையற்ற பொருளாதார கொள்கையினால்  ரூபாவின் வீழ்ச்சி  தொடர்ந்து உயர்மட்டத்தில் காணப்பட்டது.  2005ம் ஆண்டு ஆட்சி பொறுப்பினை ஏற்கும் போது  பொருளாதார நெருக்கடி மற்றும் இதர சவால்கள் எமக்கு காணப்பட்டன.   அனைத்து  சவால்களுக்கு மத்தியிலும்  ரூபாவின் வீழ்ச்சியை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டிருந்தோம்.

2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் தொர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இடைக்கால அரசாங்கம் ஆட்சிக்குவரும் போது  ரூபாவின் வீழச்சி 200ஆக காணப்பட்டது. பொருளாதார  கொள்கை திருத்தம் செய்யப்பட்டதன் பின்னர் ரூபாவின் வீழ்ச்சி கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வரப்பட்டு 185  ரூபாவாக  ஒரு டொலரின் பெறுமதி  கட்டுப்படுத்தப்பட்டது என்றார்.

No comments

Powered by Blogger.