Header Ads



ஞானசாரரின் பேஸ்புக் பக்கம் தடை - ரதன தேரர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் பேஸ்புக் பக்கம் தடை செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அபேஜன பல கட்சியின் தலைவருமான அத்துரலியே ரதன தேரர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இனவாதி என்று குறிப்பிட்டே அவரின் பேஸ்புக் பக்கம் தடை செய்யப்பட்டுள்ளதாக அத்துரலியே ரதன தேரர் முறையிட்டுள்ளார்.

ஞானசார தேரரை பொறுத்த வரையில் அவர் முஸ்லிம் தீவிரவாதத்துக்கு எதிராகவே தமது கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரும் அவர் இனவாதி என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரர் கூறியவை சரியென்று நிரூபிக்கப்பட்ட பின்னர் ஏன் அவரின் சமூக ஊடகம் தடை செய்யப்பட வேண்டுமென்றும் ரதன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

3 comments:

  1. இலங்கை ஒரு புகழ் வாய்ந்த ஜனநாயக நாடுகளில் ஒன்று. தற்காலத்தில் அதன் சிறப்பிற்கு சவால் விட்டுக் கொண்டிருப்பது ஞானசாரரைவிட இந்த அதுரலிய ரத்னசாரர் தான். இதனை அரசு மாத்திரமல்ல பௌத்தபீடங்களும் பௌத்த மதத்திலுள்ள புத்திஜீவிகளும் "சும்மா" பார்த்துக் கொண்டு இருப்பதுதான் கவலைக்கும் கேலிக்கும் உரிய விடயமாகப் பார்க்கப்படுகின்றது. இலங்கையில் இனவாதமும் பௌத்த தீவிரவாதமும் தோன்றுவதற்கு இவரகளது பங்களிப்பு மிக முக்கியமானதாகக் காணப்படுகின்றது. கடவுளின் பூமியில் நீதி மறுக்கப்படுவது இல்லை. அவை தற்காலிகமானதுதான் என்பதனை காலம் மிக விரைவில் அவரகளுக்கு உணர்த்தும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று ஆட்சி அதிகாரங்களைத் தக்கவைப்பதைவிட சாதாரண பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து இலங்கை மக்களுக்கு அதீத சேவை செய்து நாட்டை அபிவிருத்தி செய்து உலக நாடுகள் மத்தியில் "இலங்கை ஜனநாயக விழுமியங்களைப் பேணும் நாடு" என்ற கௌரவத்தைப் பெறுவதே நாட்டின் இன்றைய அதி முக்கிய தேவையாகும்.

    Sri Lanka is one of the most famous democracies. It is this Athuraliya Ratnasarar rather than the Gnanasara that has challenged its excellence at present. It is not only the state but also the Buddhists and the intellectuals of Buddhism who are "idle" and see this as a matter of concern. Their contribution to the emergence of racism and Buddhist extremism in Sri Lanka is seen as crucial. There is no denial of justice on God’s earth. Time will soon tell them that they are temporary. The most important need of the country today is to rule the country with a simple majority rather than retaining two-thirds majority and serve the people of Sri Lanka, develop the country and gain the prestige of "Sri Lanka as a country of democratic values".

    ReplyDelete
  2. இந்த இரண்டு இனவாதிகளும் பிரதான சூத்திரக்காரர்களின் கொன்ரக்ட் செய்பவர்கள். இனவாதமும்,இன மதத் துவேசமும் உலகில் படுதோல்வியடைந்த இரண்டு கைங்கரியங்கள் என்பதை இன்னும் இந்த துவேசங்களுக்கு விளங்காமல் இருப்பது தான் ஆச்சரியம்.

    ReplyDelete
  3. ai u monke for wht feecbook

    ReplyDelete

Powered by Blogger.