Header Ads



நண்பர்கள் என கருதியவர்களாலேயே எனக்கு துரோகமிழைக்கப்பட்டது, நான் சந்தித்த பெரும் ஏமாற்றம் இது - மகிந்த

நான் நம்பிக்கை வைத்திருந்த நண்பர்கள் என கருதியவர்களாலேயே எனக்கு துரோகமிழைக்கப்பட்டது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சண்டே டைம்சிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசியல் வாழ்க்கையில் முக்கியமான சாதனைகள் தோல்விகள்-

விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் வெற்றிபெறுவதற்கான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியமையே எனது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான சாதனை.

எனக்கு முன்னர் ஜனாதிபதிபதவிகளை வகித்தவர்கள் துணிச்சலான முடிவுகளை எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அச்சம் கொண்டிருந்தனர்.

அவர்கள் வெளிநாட்டு அழுத்தங்களிற்கு அடிபணிந்தனர்.

மூன்று தசாப்தகாலத்திற்கு மேல் இந்த நாட்டை பாதித்து வந்த ஒரு சிக்கலை தீர்ப்பதற்கான அரசியல் உறுதிப்பாட்டினை என்னால் வழங்க முடிந்தது என்பது குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன்

மேலும் நான் பல உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கியதை எனது சாதனைகளாக கருதுகின்றேன்-நுரைச்சோலை அனல்மின்நிலைய திட்டம்,மேல்கொத்மலை, அம்பாந்தோட்டை துறைமுகத்திட்டம் போன்றவை.

இவை பல வருடங்களாக வெறும் யோசனைகளாகவே காணப்பட்டன, எந்த அரசாங்கத்தினாலும் அவற்றை நடைமுறைப்படுத்த முடியவில்லை.
எனது ஒன்பது வருட ஆட்சியின் போது இலங்கையின் தலாவருமானம் அதிகரித்ததை பலர் உணரவில்லை.

2015 ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியே எனது அரசியல் வாழ்க்கையில் நான் சந்தித்த பெரும் ஏமாற்றமாகும்.
நான் நம்பிக்கை வைத்திருந்த நண்பர்கள் என கருதியவர்களாலேயே எனக்கு துரோகமிழைக்கப்பட்டது

அந்த தோல்வி சதித்திட்டங்கள் மற்றும் சூழ்ச்சிகள் மூலம் உருவாக்கப்பட்டது.அந்த தேர்தல் பிரச்சாரம் முழுவதும் பக்கச்சார்பானதாகவும் பொய்களை அடிப்படையாக கொண்டதாகவும் காணப்பட்டது.

குறிப்பிட்ட சில விடயங்களில் என்னிடம் காணப்பட்ட தோல்விகள் குறைபாடுகள் காரணமாகவே இந்த தோல்வி ஏற்பட்டது என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.
அந்த தோல்வியை என்னையும் எனது ஆதரவாளர்களையும் மாத்திரம் பாதிக்கவில்லை முழு நாட்டையும் பாதித்தது.

ஆகஸ்ட் ஐந்தாம் திகதி நாடாளுமன்ற தேர்தலிற்காக தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்குவது குறித்து- நாங்கள் வலுவான பொதுஜனபெரமுன ஆட்சியை உருவாக்க எதிர்பார்த்திருக்கின்றோம்.

ஜனாதிபதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை முன்னெடுப்பதற்கான சிறந்த நாடாளுமன்ற ஆதரவை நாங்கள் வழங்கவேண்டும்.

பொருளாதாரத்தை பற்றி அறிந்தவர்கள் அனைவரும் நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து நாங்கள் எதனை சுவீகரித்துள்ளோம் என்பதை புரிந்துகொண்டிருப்பார்கள்.முற்றுமுழுதாக சிதைந்த நிலையில் காணப்பட்ட பொருளாதாரத்தையே நாங்கள் சுவீகரித்தோம்.

வரிகளை குறைப்பதன் மூலம் நெருக்கடியில் உள்ள பல வர்த்தகங்களிற்கு நாங்கள் ஆதரவை வழங்கவேண்டும். பொருளாதாரத்தை சரியான நிலைக்கு கொண்டுசெல்வதே எங்களின் முன்னுரிமைக்குரிய விடயம்.

No comments

Powered by Blogger.