Header Ads



அநாவசியமாக வீட்டைவிட்டு வெளியேறாதீர்கள்

(செ.தேன்மொழி)

கொவிட் -19 வைரஸ் பரவலை தடுப்பதன் நோக்கில் நேற்று புதன்கிழமை இரவு முதல் நாளை மறுதினம் அதிகாலை நான்கு மணிவரை நாடளாவியரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதனால், 24 மணித்தியாலயமும் இயங்கும் பொலிஸ் சோதனைச்சவாடிகளை கடமையில் ஈடுப்படுத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொசன் பொயாதினம் காரணமாக மக்கள் நடமாடும் வாய்ப்பு அதிகமாக காணப்படுவதால், வைரஸ் பரவலுக்கான வாய்ப்பும் அதிகமாக காணப்படும். இதனாலேயே நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவையின் நிமித்தமே வீட்டை விட்டு வெளியேற முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி செல்பவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதன் நோக்கிலே இந்தச் சோதனை சாவடிகள்  அமைக்கப்பட்டுள்ளன.

இதன்போது வீட்டை விட்டு வெளியேறும் நபர்கள், வாகனங்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்ததன் பின்னரே அவர்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய நேற்று புதன்கிழமை இரவு பத்து மணிமுதல் நாளை மநுதினம் சனிக்கிழமை அதிகாலை நான்கு மணிவரை இந்த சோதனைச்சாவடிகள் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது அத்தியாவசிய தேவையின்றி யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.