Header Ads



இலங்கைக்கு வந்த 42000 பொதிகளுடைய,,விலாசங்கள் அழிந்து போயுள்ளமையினால்...


வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பெருமளவு பொதிகளுக்கு விலாசங்கள் அழிந்து போயுள்ளமையினால் அவற்றை உரியவர்களிடம் ஒப்படைப்பதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விமானம் ஊடாக இலங்கைக்கு அனுப்ப விருந்த பாரிய பொதிகள் கொள்கலனில் அடைக்கப்பட்ட கடல் வழியாக அனுப்பப்பட்டுள்ளன. இதனால் பார்சல்களில் நீர் பட்டு விலாசங்கள் மறைந்து போயுள்ளமையினால் உரிமையாளர்களை கண்டுபிடிக்க முடியாத நிலைமை ஏற்படடுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

விமானங்களில் வர வேண்டிய பொதிகள் கடல் வழியாக அனுப்பப்பட்டதன் பின்னர் முழுமையாக விலாசங்கள் மறைந்துள்ளது. விலாசங்கள் மறைந்தால் யாருக்கு பகிர்வது என எவ்வாறு தெரிவு செய்வது.

வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. அவை திருடப்பட்டுள்ளதாகவும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றன. அவை நியாயமற்ற குற்றச்சாட்டுகள்.

கடந்த காலங்களில் உலகம் முழுவதும் பணிகள் நிறுத்தப்பட்டது. விமான நிலையங்கள் மூடப்பட்டன. கப்பல்கள் வரவில்லை. இதனால் 42 ஆயிரம் பொதிகள் உள்ளன. அந்த பார்சல்கள் அனைத்தும் விமானங்களில் வர வேண்டிய பொருட்கள். கடலில் வந்த பின்னர் அவற்றில் நீர் பட்டு விலாசங்கள் மறைந்துள்ளது. விலாசங்கள் மறைந்த பாரசல்களை எப்படி பகிர்வது என தெரியவில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. The delivering company did not take precautions. They could have done their job expecting weather affects on such important materials.

    At least in future they will consider before uploading materials to alternative way (from Air to Sea cargo).

    Government should instruct such companies make it a policy for such companies...

    ReplyDelete

Powered by Blogger.