June 24, 2020

முஸ்லிம் மக்கள் வாக்குகளை எங்களுக்கு, அள்ளிப்போட்டால் 3 ஆசனங்களை பெறுவோம்

(எம்.எம்.ஜபீர்)

இன்றைக்கு நாடுமுழுவதும் பிரச்சினையும், துவேசமும் நிறைந்து காணப்படுகின்றமைக்கு காரணம் நமது அரசியல் கட்சிகளின் பெயரும், அஷ்ரப்பினுடைய வழிகாட்டல்களை மீறி நடந்தமையினால் தான் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக  தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் தேசிய காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளர் எஸ்.நபீர் தலைமையில்  மத்தியமுகாம் பிரதேசத்தில்  நடைபெற்றபோது  உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் உரையாற்றுகையில், 

மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் ஹெலிகொப்டரில் ஏறி மரணிக்கும் வரையில் முஸ்லிம் காங்கிரஸை ஒதுக்கி வைத்துவிட்டு தான் தேசிய ஐக்கிய முன்னணி உருவாக்கினார். அவருக்கு தெரியும் முஸ்லிம், தமிழ், சிங்களம்  என்று அரசியல் கட்சிகள் உருவாகினால் நாட்டில் என்ன நடைபெறும் என்று ஆகவேதான் அவர் விட்ட பாதையில் நாங்கள் வைத்த பெயர்தான் தேசிய காங்கிரஸ் நாங்கள் பின்னுக்கு போய் வரல்ல இவர்கள் உடனடியாக  செய்தது தலைவர் விட்டு சென்ற கட்சியை கையிலெடுத்தனர். இதனால் இன்று நாடு முழுக்க துவேசமும் பிரச்சினையும் நிறைந்து காணப்படுகின்றது. நாங்கள் சரியான இடத்தில் புள்ளிவைத்திருகின்றோம். தேசிய காங்கிரஸிற்கு இந்த நாட்டை பற்றி தெரியும் நாட்டில் அன்பு வைத்திருகின்றோம். எங்களுக்கான நாடு எமது பிள்ளைகள் வாழப்போகும் நாடு இங்கு பெரும்பாண்மையாக சிங்கள மக்களும் தமிழர்களும் இருக்கின்றார்கள் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் நமது மக்களும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற என்னத்தோடு உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி துவேச கட்சி அல்ல எங்களுக்கு தெரியும் இந்த மக்களை எப்படி வாழவைக்க வேண்டும் என்று

நாங்கள் எங்களுடைய  மாவட்டத்தில் ஆகக்குறைந்து மூன்று ஆசனங்களை பெறலாம் திருகோணமலை மாவட்டத்தில் வழக்கு உள்ளது அது வெற்றி பெற்ற அந்த மாவட்டம் எந்தளவுக்கு என்றால் இரண்டு ஆசனங்கள் பெறலாம், பொலநறுவையிலும் ஒரு ஆசனம் கிடைக்கும் இவைகள் ஒருபக்கம் இருக்க இறைவன் நாடினால் ஒரு தேசிய பட்டியல் ஆசனமும் கிடைக்கும் அது வெல்லாம் எங்களுடைய பிரச்சிணை அல்ல நாங்கள் இவ்வாறு ஒன்று சேர்ந்து அரசியல் பலத்தை பெற முடியுமானால் எங்களுக்கு தற்போது நாட்டிலுள்ள ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் எங்களுக்கு தெரியாதவர்கள் அல்ல நாங்கள் புதிதாக போய் கேட்க வேண்டிய அவசியம் இல்லை அதற்காக அமைச்சராக வேண்டும் அமைச்சுக்குதான் நாங்கள் ஒடுகின்றோம் என நீங்கள் நினைக்கவும் கூடாது. நமது மக்களுக்கு தேவையான விடங்களை அரசியல் அதிகாரம் உள்ள போதும் அதிகாரம் அற்ற போதும் செய்து காட்டியவர்கள்.

ஸ்ரீ.ல.மு.கா. ஸ்தாபகத் தலைவர்  எம்.எச்.எம்.அஷ்ரப் அன்று உங்களுக்கும் எங்களுக்கும் கூறிவிட்டு சென்றார்தானே  ஐக்கிய தேசிய கட்சியில் ரணில் விக்கிரமசிங்க தலைவராக இருக்கும் வரைக்கும் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பயணிக்கமாட்டது என கூறினார். தானே ஆனால்  தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் எத்தனையோ வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் கூறுகின்றார் இந்த ரணில் விக்கிரமசிங்கவை நம்ப  முடியாது என்று இதனைதான் இவ்வளவு நாளும் தேசிய காங்கிரஸ் சென்னது இவ்வாறான தலைவர்களை எவ்வாறு முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொள்வது பல தசாப்த்தமாக ரணிலுடன் பயணித்துவிட்டு தற்போது காரணத்திற்காக செல்லுகின்றார்கள் 

நாங்கள் விரும்பியிருந்தால் பொதுஜன பெரமுன கட்சியில் சேர்ந்து தேர்தல் கேட்டிருப்போம். ஆனால் உரிமைகளை விட்டுக் கொடுப்பதற்கு நாங்கள் தயாரில்லை எங்களுக்கு மூன்று தொகுதி அதுவும் பெரும் தொகுதிகள் உள்ளன அம்பாறை என்பது ஒரே ஒரு தொகுதி மாத்திரம்தான் ஆசன ஒதுக்கீடுகள் முறையாக அல்லாமல் நாங்கள் போய் மூக்குடைந்துவருவர்கள் அல்ல எமது அடிப்படை உரிமைகளில் நாங்கள் கவனமாக இருப்போம் சிங்கள மக்கள் வாக்கைப் போட்டு அவர்களின் பிரதிநிதுத்துவத்தை எடுக்கட்டும் முஸ்லிம் மக்களிடம் வாக்கு வங்கி இருக்கின்றன அள்ளிப் போட்டால், இந்த 10 பேரில் 4 பேர் அல்லது மூன்று பேர் பாராளுமன்றம்  செல்லலாம் ஏன் இவ்வளவு காலம் முஸ்லிம் காங்கிரசுக்கு என்று அள்ளிப்போட்டார்களான பெற்ற பாராளுமன்ற உப்பினர்கள் தற்போது உள்ளார்கள்தானே இது ஒன்றும் புதிய விடயம் இல்லையே இனிஇவர்கள் வாக்களித்து  பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று என்ன செய்யமுயும் இந்த கால கட்டத்தில் தேசிய காங்கிரஸிற்கு அளிக்கின்ற வாக்கின் மூலமாகத்தான் அம்பாரை மாவட்டத்தில் எமது சமூகத்தில் நீண்டகாலமாக தீர்க்;கப்படாத பிரச்சினைகளையும் தீர்க்க கூடியதாக இருக்கும் எனவும் மேலும் தெரிவித்தார்.

1 கருத்துரைகள்:

This is day dream because you have told Basil Rajapaksa how much preferance votes you can get it. So ruling family told you to contest alone because SLPP can get 2 MPs without your support in Ampara district.

Post a comment