June 11, 2020

எனக்கு ஓட்டுப் போடுங்கள் - 30 வருடமாக அரசியல்வாதிகள் தூங்கினார்களே தவிர எதுவும் செய்யவில்லை


பாராளுமன்றத்தில் 30 வருட காலமாக எமது அரசியல் வாதிகள் தூங்கி விழுந்தார்களே தவிர 30 வருட யுத்ததிற்கு முகம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களினது வாழ்க்கையை மீண்டும் கட்டியொழுப்புவதற்குரிய அரசியல் வாதியை இதுவரை காணமுடியவில்லை என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரை விகாராதிபதி சுமணரட்ன தேரர் தெரிவித்தார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுமணரட்ன தேரர் களமிறங்கியுள்ளது தொடர்பாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு விகாரையில் இடம்பெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழுகின்ற பௌத்த மதகுரு என்ற வகையில் மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற மக்கள் தொடர்பாக கூடிய கவனமும் அக்கறையுடன் செயலாற்றி வந்த மதகுரு நான், கிழக்கு வாழ் மக்கள் அறிந்த விடயம் அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 22 சுயேச்சைக்குழு மேளச்சின்னத்தில் 1 இலக்கத்தில் போட்டியிடுகின்றேன்.

யுத்தகாலத்தில் நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூலை முடுக்கிலுள்ள கிராமம் கிராமமாக சென்று அனைத்து தமிழ் மக்களுடைய பல்வேறுபட்ட பிரைச்சனைகளுக்கு முன்நின்ற மதகுரு என்ற அடிப்படையில் அந்த காலத்திலிருந்து இதுவரை சில விடயங்களை கவனித்து வந்தேன்.

இந்த தமிழ் மக்களை அதிலிருந்து விடுவிப்பது யார்? தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கு முன் நிற்ககூடிய சரியான தலைமத்துவத்தை இது வரை எடுத்திருப்பவர் யார்?

இம் மக்கள் 30 வருடகாலமாக முகம் கொடுத்து வேதனைப்பட்ட மக்களாக இருந்த போதும் அவர்களது வாழ்க்கை மீண்டும் கட்டியொழுப்புவதற்குரிய அரசியல் வாதியை காண முடியவில்லை என மிக கவலையடைந்தேன்.

இருந்தபோதும் அரசியலை விரும்பாத ஒருவனான நான் இருந்தபோதும் அரசியில் ஈடுபட முன் நிற்கவில்லை.

ஆனால் இந்த மக்களுக்கு சரியான பதிலை வழங்க எந்த அரசியல் தலைவர்களும் இல்லாத காரணத்தால் 2020 பாராளுமன்ற தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் மதகுரு என்ற ரீதியில் நான் ஒரு குழுவினை அமைத்து சுயாதீன குழுவாக எனது பெயரை முன்வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டேன்.

கடைசி 3 நிமிடம் இருக்கும் போது தான் நான் சுயேச்சை குழுவாக வேட்புமனுத் தாக்குதலை செய்தேன் தற்போது சுயேச்சைக்குழு 22 இல் மேளச்சின்னத்தில் 1 இலக்கமும் தரப்பட்டுள்ளது.

3 கருத்துரைகள்:

UMAKKUM PAARALUMANRAMPOI
THOONGAVENDUMPOL THERIKIRATHU.
THOONGUVATHARKU, PANSALAIYAI VIDA PARALUMANRAM NALLA IDAMTHAAN
ENBATHAI ARINDUVAITHIRUKKIREER.

மூளைசரியில்லாத எத்தனையோ மனிதர்கள் இனியும் வௌிக்காட்டத் தொடங்கிவிட்டனர். பொதுமக்கள் எச்சரிக்கையாக தீர்மானம் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

இந்த ஆசையில்தான் புத்த தர்மத்தை தூக்கி வீசி விட்டு இனவாதம்,அடாவடித்தனத்தில் நீங்களும் உங்களின் சில சகாக்கலும் ஈடுபட்டீர்கல் கடந்த பல வருடங்களாக.ஆனால் மக்களின் இனவாதத்துக்கு எதிரான தீர்ப்பை கொஞ்ஞம் இருந்து பாருங்கள்

Post a comment