June 16, 2020

இந்திய - சீன எல்லை மோதல்: இந்திய ராணுவத்தினர் 20 பேர் பலி, அதிகாரபூர்வ அறிவிப்பு

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே திங்கள் இரவு நடந்த மோதலில் உயிரிழந்த இந்திய ராணுவ துருப்புகளின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய - சீன துருப்புகள் இடையே இதற்கு முன்னர் கைகலப்பு ஏற்பட்ட லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஜூன் 15/16 அன்று மீண்டும் மோதல் ஏற்பட்டது. அதில் படுகாயமடைந்த 17 இந்திய ராணுவ துருப்புகள் அங்கு நிலவும் பூஜ்ஜியத்துக்கும் குறைவான வெப்பநிலை நிலவியதால் உயிரிழந்தனர். இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ துருப்புகளின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. எல்லைப் பாதுகாப்பையும் நாட்டின் இறையாண்மையும் காப்பதில் இந்திய ராணுவம் உறுதியாக இருக்கிறது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த மோதலில் மூன்று இந்திய ராணுவ துருப்புகள் உயிரிழந்ததாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மோதலில் ஆயுதப் பயன்பாடு எதுவும் நிகழவில்லை என்றும் ராணுவ வீரர்களின் கைகலப்பே இந்த மரணங்களுக்குக் காரணம் என்று பி.டி.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

இந்த மோதலின்போது சீன தரப்பிலும் பாதிப்பு நிகழ்ந்துள்ளது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது. சீன ராணுவத்தினரை இந்திய ராணுவத்தினர் தாக்கியதாக சீனா குற்றம் சாட்டுகிறது என்றும் அந்த செய்தி முகமை தெரிவிக்கிறது.

இந்திய மற்றும் சீன ராணுவங்களின் மூத்த அதிகாரிகள் இடையே இந்தப் பதற்றத்தை தணிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, "இந்திய - சீன ராணுவ துருப்புகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில், இருதரப்பிலும் உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன. கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை (எல்ஏசி) மதிக்கும் ஒருமித்த கருத்தை சீனத் தரப்பு மீறியது" என்று கூறியுள்ளார்.

முன்னதாக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் தளபதிகள் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பு


இந்திய - சீன எல்லையான லடாக்கில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே திங்கள்கிழமை இரவு நேரிட்ட மோதலில் உயிரிழந்த இந்திய ராணுவத்தை சேர்ந்த மூன்று பேரில் தமிழகத்தை சேர்ந்த பழனி என்பவரும் அடக்கம் என்று தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக பிபிசி தமிழ் செய்தியாளர் சாய்ராம் ஜெயராமனிடம் பேசிய பழனியின் சகோதரரும் இந்திய ராணுவ வீரருமான இதயக்கனி, "நேற்று இருநாட்டு வீரர்களுக்கிடையே நடந்த மோதலில் எனது அண்ணன் உயிரிழந்துவிட்டதாக லடாக்கில் உள்ள ராணுவ அதிகாரிகள் என்னிடம் அலைபேசி வாயிலாக தெரிவித்தனர். தற்சமயம் ராஜஸ்தானில் பணியாற்றி வரும் நான் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள எங்களது சொந்த ஊரான கடுக்கலூருக்கு செல்ல டெல்லி விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கேன்" என்று கூறினார்.

40 வயதான பழனி கடந்த 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். குறிப்பாக, இந்த சம்பவம் நடந்த லடாக் பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் பணியாற்றி வந்ததாக அவரது சகோதரர் இதயக்கனி கூறுகிறார்.

"நான் சுமார் 10 நாட்களுக்கு முன்னர் என்னுடைய அண்ணனிடம் பேசியபோது, தான் லடாக்கின் நகர்புறப்பகுதியிலிருந்து எல்லைப்பகுதிக்கு செல்வதாகவும், அங்கு தொலைத்தொடர்பு வசதி இருக்காது என்பதால் திரும்ப அழைப்பதற்கு நாளாகும் என்றும் கூறினார்."


"நான் ராணுவத்தில் சேர்வதற்கே என் அண்ணன் தான் காரணம். அவரது மறைவு எங்களது குடும்பத்திற்கு பேரிழப்பாகும். எனது அண்ணனின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் நிலையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை" என்று கூறும் இதயக்கனி கடந்த பத்தாண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், பழனியின் இறப்புக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பழனியின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பாக 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

ராணுவ வீரர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாகவும், உயிரிழந்த ராணுவ வீரர்களின் ஆன்மாக்களை கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதிவிட்டுள்ளார்.

3 கருத்துரைகள்:

இந்திய இராணுவ நாய்களே சீன இராணுவம் உங்களை கொன்று புதைக்க முன் காலில் விழுந்து விடுங்கள்.

Weldone chinese army

இதுக்கு Surgical Strike இல்லையாமா,
அந்த வீர தீரம் எல்லாம் பாகிஸ்தானோட மட்டும்தான் போல.

தற்போது உள்ள நிலைமை இந்தியா-சீனா பிரச்சினையில் இந்தியாவுக்கு சீனா தக்க பதிலடி கொடுக்க வேண்டும் காரணம் இந்தியா எந்த ஒரு அண்டை நாடு உடனும் ஒழுக்கத்துடன் எல்லைகளை கடைப்பிடிப்பதில்லை சீனாவும் பாகிஸ்தானும் ஒன்றிணைந்து இவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் தற்போதுள்ள இந்து வேஷதாரிகள் இன் ஆட்சியோ நாகரீகம் அற்றவர்களின் கையில் உள்ளது

Post a comment