Header Ads



முஸ்லிம்கள் வெட்கப்பட வேண்டும் - என் சமூகத்தை நினைத்து வேதனையும், கவலையும்தான் மிச்சம்


ஓர் கசப்பான உண்மைய, சொல்ல வேண்டும். 

◾ஜனாசா எரிப்பதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல ஒரு முஸ்லிம் ஜனாதிபதி சட்டத்தரனி முன் வரவில்லை. 

◾முஸ்லிம் சமய தலைவர்கள் முன்வரவில்லை. யாராவது முன்வந்தவர்களுக்கு அவர்கள் அனுசரனை வழங்குவதற்கும்  தயாராக இருக்கவில்லை. 

◾பல முஸ்லிம் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் என எவரும் முன்வரவில்லை. 

◾குறிப்பிட்ட சில முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் முன்வந்தாலும், நிதிப்பற்றாகுறை, நிதி சேகரிக்க விடாமை என ஓரிரு சம்பவங்கள் பெயர் தாங்கி முஸ்லிம்களாலே மேற்கொள்ளப்பட்டது. 

உண்மையிலேயே ஜனாதிபதி சட்டத்தரனி  சுமந்திரன் இந்த வழக்கில் ஆஜராவதை நினைத்து முஸ்லிம் சமுதாயம் வெட்கப்பட வேண்டும். முஸ்லிம் சமூகம் முதுகெலும்பற்ற,  சமூகமாக மாறியதை இங்கு வெளிக்காட்டி தந்திருக்கிறார் சுமந்திரன் அவர்கள்.  

எமக்கான குரல், என் சமூகத்திற்கான பலமான  குரல் இங்கு இல்லை என்பதனை சுமந்திரன்  இந்த வழக்கில் ஆஜராவதில் உறுதிப்படுத்துகிறது. வெட்கப்பட வேண்டிய விடயத்திற்கு இங்கு நாம் மகிழ்ச்சியடைகிறோம். !  

சுமந்திரன் வந்ததன் நோக்கம் எனக்கோ,உங்களுக்கோ தெரியாது. ஆனால் ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் நல்லதொரு பாடத்தை சொல்லித்தந்து விட்டார் திரு.சுமந்திரன் அவர்கள் ! 

வெட்கப்பட்டு பதிவு போட வேண்டிய நாம்தான், சுமந்திரனுக்கு வாழ்த்து பதிவு இடுகின்றோம். ! 

இன்னமும் சமூகத்திற்கான தலைவர், இவர்கள் தான் முஸ்லிம் மக்களின் தலைவர், அந்த தலைவர், இந்த தலைவர் என கூப்பாடு போட்டுக்கொண்டு இன்னமும் தான் வால் பிடிக்க போகிறீர்களா? ஒட்டு மொத்த சமூகத்திற்கான பிரச்சினையின் போதாவது ஒன்று சேர்ந்து பிரச்சினைக்கு முடிவு கட்ட தயாரானார்களா? 

ஒருவரை, ஒருவர் குற்றம் சாட்டி, அதில் குளிர் காய்ந்து மையத்திலும் அரசியல் செய்த, செய்து கொண்டிருக்கின்ற கேவலமானவர்களுக்கு தான் இங்கு பல பேர் குடை பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள். தயவு செய்து அந்த கிணற்றிலிருந்து வெளியே வாருங்கள். ! 

என் சமூகத்தை நினைத்து வேதனையும், கவலையும் தான் மிச்சம் 

Azeem Jahufer 
09.05.2020

11 comments:

  1. இது நம் சமூகத்திற்கு தலைவிதி என்ன செய்வது வெளியே வந்து மகிந்த வின் காலில் விழுவதா?

    ReplyDelete
  2. So called politicians are not united and fighting to increase number of members being selected for the forthcoming general election in Ampara district. They are only interested in their personal perks and benefits at the expenses of whole S/Lankan Muslim community.

    ReplyDelete
  3. இனவாதத்தை மூலதனமாகப் பாவித்து அரசியல் செய்யும் இக்காலத்தில் ஒரு சிறுபான்மையினர் மற்றொரு சிறுபான்மையினருக்காக செயற்படுவது இராஜதந்திரமானது. மு.கா வும் கூட்டமைப்பும் தருணம் அறிந்து செயல்பட்டு வருகிறது. இதில் சுமந்திரன் ஐயா ஒருபடி மேல்தான்.

    ReplyDelete
  4. சட்ட முதுமானிகளே வெளியே வாங்க ராஜா

    நிஜ வாழ்க்கை என்பது பேப்பர்ல கட்டுரை எழுதுற மாதிரி இல்ல ராஜா

    வெளிய வாங்க

    ஆட்சி கவிழ்பின் போது மாட்டின கறுப்பு கோட் எங்க.
    இப்பவும் அத எடுத்து மாட்டுங்க

    ReplyDelete
  5. மனதளவில் கவலைப்பட்டுக் கொண்டிருந்த விடயத்தை எழுத்தில் வடித்துள்ளீர்கள் நன்றி அஸீம் ஜாஃபர் அவர்களே.

    ReplyDelete
  6. உண்மையிலேயே நல்ல கருத்து சரியாக சொன்னீர்கள் என்பது சமூகத்தின் தலைவிதியை

    ReplyDelete
  7. உண்மையிலேயே நல்ல கருத்து சரியாக சொன்னீர்கள் என்பது சமூகத்தின் தலைவிதியை

    ReplyDelete
  8. Almost the Lock-Down is being relaxed and DGHS and the authorities would reconsider the gazette notification of cremation; the so called leaders are ready with their Black Coats to Parade behind someone who still favors the creation of a carved out council for his community in the Heart of Kalmunai.
    Shame on to the Presidential Councils in Muslim community whether they in Political parties especially they boast of safeguarding the community.
    Days are gone with that Charismatic leader Ashroff.
    The Political heads should have had the farsightedness with the first cremation.

    ReplyDelete
  9. பிறையை தீர்மானிக்கும் பொறுப்பையும் சுமந்திரனிடம் கொடுத்தால், இந்த முறை முஸ்லீம்கள் எல்லோரும் ஒரே நாளில் ஒற்றுமையாக பெருநாளை கொண்டாடலாம்।

    ReplyDelete
  10. உங்களை ஆதரிக்காத மற்றும் ஆதரிப்பதற்கு பதிலாக உங்களை தொந்தரவு செய்ய விரும்பும் அரசியல்வாதிகளை பட்டியலை விடுவிக்கவும்

    ReplyDelete
  11. well said,but our umma never learn, still believing some fox

    ReplyDelete

Powered by Blogger.