Header Ads



பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு, பெரும்பான்மைக்கும் அதிக வாக்கினை பெறும்

(இராஜதுரை ஹஷான்)

பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்கினை பெறும். ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை மக்கள் வழங்கிய ஆதரவில் எவ்வித மாற்றமும் கிடையாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமினி  லொகுகே தெரிவித்தார்.

பொதுத்தேர்தல் எப்போது இடம்பெறும் என்பதே மக்களின் பிரதான எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் பாதுகாப்பான முறையில் வாழ்வதற்கு மக்கள் பழகிக் கொண்டார்கள். பொதுத்தேர்தலை தற்போது பாதுகாப்பான முறையில் நடத்த  முடியும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது.

பொதுத்தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கு பொதுஜன பெரமுன புதிதாக மார்க்கங்களை உருவாக்க  வேண்டிய தேவை கிடையாது.

பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன  மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளை பெறும்.

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றிப் பெறுவதற்கு பெரும்பான்மை மக்கள் வழங்கிய ஆதரவு பாரிய பலமாக அமைந்தது. இந்த ஆதரவு பொதுத்தேர்தலிலும் எவ்வித மாற்றமுமின்றி கிடைக்கப் பெறும் என்றார்.

1 comment:

  1. அந்த நம்பிக்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை திடீரென உயர்வடைந்துள்ளது. கொடுத்த ஐயாயிரம் ரூபாவுக்கு வரியா என பொதுமக்கள் வினவுகின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.