Header Ads



2 மாத ஊரடங்கு - தாயாரை காண ஆசைப்பட்ட கல்லூரி மாணவர் விமான விபத்தில் சிக்கிய பரிதாபம்


பாகிஸ்தானில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் இரண்டு மாத ஊரடங்கில் இருந்து விடுபட்டு, தாயாரை காண ஆசையுடன் ஊருக்கு திரும்பிய நிலையில் நேற்றைய விமான விபத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று குடியிருப்புகள் மிகுந்த பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் பலியான 97 நபர்களில் 20 வயதான பல்கலைக்கழக மாணவர் அம்மர் ரஷீதும் ஒருவர்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவரான அம்மர் ரஷீதுக்கு தற்போது அவரது நண்பர்கள் மற்றும் சக மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

விமானம் விழுந்து நொறுங்கிய பகுதியில் இருங்து இதுவரை மீட்கப்பட்ட 97 சடலங்களில் அடையாளம் காணப்பட்டவர்களில் அம்மரும் ஒருவர்.

விமானம் புறப்படுவதற்கு சற்று முன்பு அம்மர் தனது நண்பர்களிடம், லாகூரில் உள்ள அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கராச்சிக்கு புறப்பட இருக்கிறேன்.

கொரோனாவால் இரண்டு மாத ஊரடங்கிற்கு பின்னர் இது முதல் தடவையாக ஊருக்கு போவதாக அம்மர் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.

தாயாரையும் குடும்பத்தாரையும் காண வேண்டும், இரண்டு மாத ஊரடங்கு, நான் கராச்சிக்கு திரும்புகிறேன், கடவுளுக்கு நன்றி என அவர் கடைசியாக தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அம்மரின் மறைவுக்கு அவரது நண்பர்கள் மற்றும் சக மாணவர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.