Header Ads



கொவிட் 19 நிதியத்தின் வைப்பு 902 மில்லியனாக அதிகரிப்பு

நிறுவன, தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 902 மில்லியனாக அதிகரித்துள்ளது.

தலகல மங்கலாராம மகா விகாராதிபதி தலகல சுமனரத்ன தேரர் ஒரு லட்சம் ரூபாவையும், ஸ்ரீ ஷாந்திதார பானபொக்க மன்றத்தின் தலைவர், பேராசிரியர் வைத்தியர் எஸ்.கே. பானபொக்க பிக்குனி ஒரு மில்லியன் ரூபாவையும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் திருமதி ஏ.எம்.ஏ. மானெல் பண்டார ஐம்பதாயிரம் The Power Guard Security and Investigation Bureau நிறுவனம் இரண்டு லட்சத்து எண்ணாயிரத்து எண்ணூறு ரூபாவையும், KDA Weerasinghe & Co.(pvt) ltd நிறுவனம் ஐம்பதாயிரம் ரூபாவையும், கம்பஹா பிரதேச செயலாளர் அலுவலகத்தின் திறன் விருத்தி அதிகாரி திரு. சமரதுங்க ஐம்பதாயிரம் ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.

Eventistry தனியார் நிறுவனம் எழுபத்து மூவாயிரம் ரூபாவையும் Lalan என்ஜினியரிங் தனியார் நிறுவனம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவையும் நிதியத்திற்கு கையளித்துள்ளனர். 

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார,சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும். சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.

0112354479/0112354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலே அவர்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள முடியும்.

மொஹான் கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.05.12

No comments

Powered by Blogger.