April 14, 2020

அவசரப்பட்டு விரல்களை நீட்டாதீர்கள்...

- Mohamed Rafideen -

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஓர் விடியற்காலையில் இவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு சென்றிருந்தேன். 

அதற்கு முந்திய கதையை கூறுகிறேன். மரணித்த குழந்தைகளின் தாயார் இறந்துவிட்டதாகவும், குழந்தைகளை யாராவது முன்வந்து பெறவிரும்பினால் தத்து கொடுப்பதாகவும் பிள்ளைகளின் தந்தையான அவர் எனது சாச்சா ஒருவரிடம் கூறியிருந்தார். 

அதற்கமைய நானும் அக்குழந்தைகளை எடுத்து வளர்ப்பதற்காக விதவையான எனது மாமியுன் விருப்பத்திற்கும், ஆலோசனைகளுக்கும் ஏற்ப அக்குழந்தைகளை எடுத்து வளர்ப்பதற்கும் ஆயத்மானேன்.

அப்போது எனது பொருளாதார நெருக்கடி, அப்பிள்ளைகளின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்தையும் திடமாக சிந்தித்த பின் "சரி பிள்ளைகளை தத்தெடுப்போம்" என ஓர் தீர்க்கமான முடிவுக்கும் வந்தேன். 

அவர் பிள்ளைகளோடு தங்கியிருந்த மாவடிச்சேனை சிங்கர் கடையின் அருகில் அமைந்த ஓரு கட்டிடத்துக்கே நான் அவ்விடியலின் அதிகாலையிலேயே அங்கு சென்றிருந்தேன்.

பெண் குழந்தையை குளிக்க வைத்து உடை உடுக்கவைத்துக்கொண்டிருந்தார் அவர். அந்த பிள்ளையின் நாநாவோ வெளியிலே ஓர் கல்லில் உற்கார்ந்திருந்தான்.

குழந்தைகளின் தந்தையான அவரை அழைத்து அவர்களைப்பற்றி விசாரிக்கவும் தொடங்கினேன். தத்தெடுப்பினை அவரிடம் குறிப்பிடும் முன்பே அப்பெண் குழந்த அழுதுகொண்டே ஓடோடி வந்து அதன் வாப்பாவை ஒட்டிக்கொண்டது.

அந்த காட்சியை பார்த்ததும் என்னால் அவ்விடத்தில் எதுவுமே கூறமுடியுமால் தயங்கியபடி நின்றுவிட்டேன்.

"மனைவி மரணித்த பின் என்னை விட்டு பிரிய மனமில்லாமல் ஒன்னுக்கு போனாலும் கூடவே ஓடிவந்துவிடுவார்கள். தனியாக விட்டுச்சென்று தொழில் புரியவும் முடியாதா நிலை" என அவர் அவருடைய நிர்க்கதியான நிலையையும் அப்போது கூறினார்.

அவ்விடத்தில் என்னால் என்ன உதவி பண்ணமுடியுமோ அதை அந்த குழந்தைகளுக்காக செய்துவிட்டு வெளியேறி வந்துவிட்டேன். 

பிறகு காலங்கள் கடந்தன. கடும் பொருளாதார நெருக்கடிகளையும் நானும் சந்திக்க நேரிட்டது. அச்சந்தர்ப்பத்திலெல்லாம் "எல்லாம் நல்லதுக்காவே... அக்குழந்தைகளையும் நம்மோடு இணைக்காமல் இறைவன் தடுத்துள்ளான்" என்பதினை எங்களுக்குள் நாங்களாக பலமுறை கூறிக்கொண்ட சந்தர்ப்பங்களுமுண்டு...

நீண்ட காலத்துக்கு பின். சென்ற மூனு அல்லது நான்கு மாதங்கள்தான் இருக்கும், குழந்தைகளின் தந்தையான் அவரை ஓரிடத்தில் தனிமையில் சந்திக்கவும் நேரிட்டது.

குழந்தைகளைப்பற்றி நலம் விசாரித்தேன். கொழும்பில் எங்கோவோர் இடத்தில் யாரோ பராமரித்து வருவதாகவும் குறிப்பிட்டார். "பிள்ளைகளை பார்க்க போகவில்லையா?" என கேட்டேன். "இல்லை... முறையாக கையெழுத்தும் இட்டு பிள்ளைகளை வழங்கிவிட்டு வந்துவிட்டேன்" என்றே பதில் கூறினார்.

போனில் மாத்திரமே பேசுவதாகவும் பெண் குழந்தை மட்டும் தினமும் அழுவதாகவும் "எங்களை பார்க்க வாங்க வாப்பா" என கதறுவதாகவும் கூறினார். மூன்று மாதங்களுக்கு முன்பேதான் சென்று பார்த்தும் வந்ததாகவும் குறிப்பிட்டார். 

"பாவம்... அடிக்கடி சென்று பாருங்கள். தாயில்லாதுகள்.. எதுவும் அறியா சிறு குழந்தைகள்வேறு. அவர்களை பார்க்க போகும்போது எனக்கும் தகவல் தாருங்கள்... என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்" என்றபடி நான் அவரிடமிருந்து அப்போது விடைபெற்று வந்துவிட்டேன். 

சில வாரங்களுக்கு முன்புதான் குழந்தைகளோடு அவரை ஊரில் காணமுடிந்தது. வேலைப்பளுவுக்கு மத்தியில் அவரிடம் எதுவுமே பேச முடியாமல் சிரித்தபடி நானும் சென்றுவிட்டேன். 

தொழில் கஷ்டம், பிள்ளைகள் கூடவே இருப்பதனால் எங்கு சென்றும் தொழில் பார்க்க முடியாத பிரச்சினைகளும் அவரை சுற்றி இருந்தது.

தற்போது கொரோனா கெடுபிடிகள் வேறு. வளமைக்கு மாறான அதிகப்படியான வறுமை. ஏற்கனவே ஏழைகளாக வாழ்ந்தவர்களை மேலதிகமாகவும் அது நசுக்கத் தொடங்கிவிட்டது. பலரின் நிலை வெளியே தெரியவில்லை. பலர் அவர்களின் பிரச்சிரைகள் என்னவென்று கண்டுகொள்ளவும் விரும்பவில்லை. 

குழந்தைகளின் கொலை சம்பவத்தின்போது, அவர் போதையில் இருந்தாரோ மனதளவில் பாதிக்கப்பட்டு அறிவிழந்து இருந்தாரோ அல்லது திட்டமிட்டு கொலை செய்தாரோ எனும் பல கேள்விகளும் என்னுள்ளும் எழுந்து செல்லத்தான் செய்கிறது. 

தான் பெற்றெடுத்த குழந்தைகளை தன் கைகளினாலே கொல்வதென்பது உளவியல் ரீதியாகவும் உணவியல்ரீதியாகவும் அவர் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ளார் என்பதும் மட்டும் புரிகிறது. அவருடைய கடந்தகால நிகழுவுகளின் மூலமமே அதுவும் எனக்குள் புலப்படுகிறது. 

இவற்றுக்கெல்லாம் முக்கியமான காரணம் வறுமை!. 

இன்று ப்லாஸ் நியூஸ்! கொட் நியூஸ்! சம்பவ இடத்தில் புகைப்படம் என ஆளாளுக்கு முந்திக்கொண்டு இடும் இந்த வர்க்க சமூகத்தின் உஷார் நிலை இவர்களின் கடந்தகால வாழ்வினை கவனிக்காமல் விடடதே மிகப்பெரிய தவராகும்.

அக்குழந்தைகளின் மரணத்திற்கு நீதியளவில் அவர்களின் தந்தையே காரணமென நிரூபிக்கபடலாம். ஆனால் அதற்கான ஓர் சூழ்நிலையையும் ஓர் குற்றவாளியையும் உருவாக்கிய பங்கென்பது இந்த சமூகத்தில் வாழும் இவர்கள் போன்றோரை கைவிட்ட குடும்பம், உற்றார் உறவினர், நண்பர்கள், எனக்கென்ன என்று கடந்து சென்ற மனிதர்கள், சமூகத்தில் அக்கறையுள்ளவர்கள் நீ - நான் உட்பட அவர்களை சுற்றியிருந்து குழந்தைகளின் மரணம்வரை வேடிக்கை பார்த்த ஒட்டுமொத்த சமூதாயுமும்தான் காரணம் என்பேன். 

மனது வலிக்கிறது...😢


7 கருத்துரைகள்:

நினைத்திருந்தால் இப்படி உதவி இல்லாத அந்த குழந்திகலுக்கும்,அந்த தந்தைக்கும் ஊர் மக்களே உதவி செய்திருக்கலாம்.உறவினர்கள் சேர்ந்து உதவி செய்திருக்கலாம்.இதயம் வலிக்கிரது.

எமது முஸ்லீம் சமூகத்தில் இவ்வாறு வறுமை நிலைமைகளை நிவர்த்தி செய்வதில் அப்பகுதி ஸகாத் நிறுவனங்களுக்கு பாரிய கடமை இருக்கின்றது

அன்புடையது மனிதம் என்பதற்கு அன்னையே சாட்சி. அநீதியுடையது சமூகம் என்பதற்கு வறுமையே சாட்சி.

This is correct. Farther is not only the reason for this murder, we the whole community has to take the responsibilty.

NAAN solrethalam warumaila awaru wilunthu seththirukalam pullaikala kollame Allah iwwaru seyya solawe ilaye ithuku niyayam katpika wendam

As a responsible editor of the article, he must have informed to Girama Niladhari and mosque trustee's board about poverty of particular man when you found critical home situation of the murderer even if couldn't adapt those kids.
The murderer may have turned into mental depression by caused of poverty, hardships and none of social contact of the villegers.

May Allah knows the secret of twin-child murders.

Yaa Allah may grant jannathul firthows for these children.

Post a Comment