Header Ads



வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நலன்களை, உறுதி செய்வதற்காக நடவடிக்கை


வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நலன்களை உறுதி செய்வதற்காக வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களினூடாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது

கோவிட் - 19 தொற்று நோயின் விரைவாகப் பரவி வரும் தன்மை மற்றும் இலங்கைக்கு நாடு திரும்ப இயலாத நிலைமை போன்ற வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் பிரச்சினைகளை கவனத்திற் கொண்ட வெளிநாட்டு உறவுகள் அமைச்சு, எதிர்வரும் தினங்களில் சந்திக்க நேரிடும் எந்தவொரு தேவைக்கும் தயாராகும் அதே வேளையில், வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நல்வாழ்வுக்கும், பாதுகாப்புக்கும் வசதிகளை மேற்கொள்வதற்காக உலகம் பூராகவுமுள்ள 67 நகரங்களை மையமாகக் கொண்ட தூதரகத் தலைவர்களுடன் கடந்த 2 நாட்களில் ஆலோசனைகளை நடாத்தியது.

5 பிராந்திய மையங்களின் (தெற்காசியா, மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா) தூதரகத் தலைவர்களுடன் வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்ற தொடர்ச்சியான தொலைபேசி மாநாடுகளில், கோவிட் - 19 தொற்றுநோய் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கை வழிகாட்டல்களுக்கு அமைவாக வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. கோவிட் - 19 நடவடிக்கை தொடர்பான வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் பிரதான அமைப்பு மற்றும் கிழக்கு ஆசியாப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திரு. காண்டீபன் பாலசுப்ரமணியம், மேலதிக செயலாளர்கள், குறித்த பிராந்தியங்களுக்கான பணிப்பாளர் நாயகங்கள் மற்றும் அமைச்சின் சம்பந்தப்பட்ட செயற்பாட்டுப் பணிப்பாளர் நாயகங்கள் ஆகியோர் இந்தக் கலந்துரையாடல்களின் போது இடம்பெற்றிருந்தனர். இலங்கையின் பணியாளர்களை பெற்றுக் கொள்ளும் நாடுகளை மையமாகக் கொண்ட சில ஆலோசனைகளின் போது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பதில் பொது முகாமையாளர் டபிள்யூ.எம்.வி. வனசேகர கலந்து கொண்டார்.

ஒட்டுமொத்தமாக, அனைத்து இலங்கைத் தூதரகங்களும் பெரும்பாலும் 'வீட்டிலிருந்து பணி புரிதல்' அடிப்படையில் பணியாற்றினாலும், அந்தந்த நிலையங்களிலுள்ள மாணவர் சமூகங்களுடனும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடனும் தொடர்ச்சியாக தொடர்புகளை மேற்கொண்டு வருவதுடன், தூதரக ஊழியர்களை இலகுவாக அணுகிக்கொள்ளக்கூடிய 24 மணி நேர அவசர தொலைபேசி அழைப்பு இலக்கங்களை நிறுவியுள்ளன. அந்தந்த நிலையங்களில் இலங்கையர்களின் தரவுத்தளங்களைப் புதுப்பிக்கும் பணிகள் தூதரகங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் அதே வேளையில், தகவல்களைப் பகிரக்கூடிய இணைப்புக்களைப் பராமரிப்பதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும் சமூக ஊடகத் தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டில் வைரஸ் பரவும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டவுடன், இலங்கையர்கள் நாடு திரும்புவதற்காக மேற்கொண்டுள்ள கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என சமூக உறுப்பினர்கள் மற்றும் வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்தப் பிராந்தியங்களிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் உறுதியளித்துள்ளன.

சம்பந்தப்பட்ட உள்நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதனூடாகவும், தேவைக்கேற்ப தலையீடுகளை மேற்கொண்டு அனுமதிகளைக் கோருவதன் மூலமாகவும் அவசரகால<span lang="EN-GB" style="font-size:9pt;font-family:"Times New Roman&quo

No comments

Powered by Blogger.