Header Ads



இலங்கை செய்தித்தாள் குறித்து, சீன தூதரகம் அதிருப்தி

இலங்கையில் வெளியாகும் செய்தித்தாள் ஒன்றில் வெளியான செய்தி குறித்து சீன தூதரகம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியில் கொரோனா வைரஸ் பரவலுக்கு சீன அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்ற வகையில் கருத்துக்கள் பதிவிடப்பட்டிருந்ததாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சீன தூதரகம் பகிரங்க கடிதத்தை அனுப்பியுள்ளது. அந்த கடிதம் சீன தூதரக இணையத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 8ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட இந்த கடிதத்தில் குறித்த செய்திக்காக சீன அரசாங்கம் கடும் ஆட்சேபனையை வெளியிடுவதாகவும் இது முழுமையாக வெறுப்பை தூண்டுவதாகவும் சீன தூதரகத்தின் பேச்சாளர் லூ சொங் தெரிவித்துள்ளார்.

சீனாவிலேயே இந்த வைரஸ் உருவாக்கப்பட்டது என்பதற்கு இதுவரை ஆதாரங்கள் இல்லை. உலக சுகாதார மையமும் இன்னும் அது தொடர்பில அறிவிக்கவில்லை.

ஏற்கனவே 2019ஆம் ஆண்டில் பரவும் வைரஸ் ஒன்று காரணமாக சுமார் 20ஆயிரம் பேர் வரை மரணமாவார்கள் என்று அமெரிக்க ஆய்வு நிலையமும் எதிர்வு கூறியிருந்தமையை சீன தூதரகம் சுட்டிக்காட்டியள்ளது.

இந்தநிலையில் அனைவரும் இணைந்து இந்த வைரஸை கட்டுப்படுத்த முன்வரவேண்டும். இதற்காகவே சீன அரசாங்கம் இலங்கை உட்பட்ட 100 நாடுகளுக்கு தமது உதவிகளை செய்து வருகிறது என்றும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

4 comments:

  1. why are you angry?
    china virus started from china , definitly china goverment should give compensation for all srilankan each person 100000, withdraw from hamanthoda port

    ReplyDelete
  2. என்ன ஆச்சரியம்! இது போன்ற மனிதப் படுகொலைகளை சீனாவும் அதன் அரசும் செய்கி்ன்றதா? சீ சீ அது ஒருபோதும் நடக்காது.அப்படியானால் இலங்கையின் ஒரு செய்தித்தாள் அப்படி குறிப்பிட்டதா? அது சீன தூதரகத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இனியும் இதுபோன்ற தவறுகளை செய்யக்கூடாது. உலகிலேயே நீதியையும் சமாதானத்தையும் கொண்டுவருவதற்கு சீனா இரவுபகலாகப்பாடுபடுகின்றது என பொருள்படும்வகையில் தான் பத்திரிகைகளில்,இணையத்தளங்களில் எழுதவேண்டும்.அதைத்தான் சீன அரசாங்கமும்,சீன தூதரமும் விரும்புகின்றன.

    ReplyDelete
  3. enna adirupthi .adu than unmay.vairesuku karanam china than

    ReplyDelete
  4. Result of irresponsible reporting by irresponsible media.

    ReplyDelete

Powered by Blogger.