Header Ads



நாடு பிரிந்து வெளிநாட்டில் வாழும், அத்தனை உறவுகளுக்கும் இது சமர்ப்பணம்

துடிக்கும் நெஞ்சம்

கடல் கடந்து கப்பல் ஏறினால்
காண்பதெல்லாம் கனவு ஒன்றுதான்.
கண்ட கனவு கலையும் முன்னே
காரிருள் சூழ்ந்து கொண்டது ஏனோ.

எதோ கொஞ்சம் உசிரிருக்க
அதையும் புசித்தாய் கொரோனாவே.

மானிட சதியோ!
இறைவனின் விதியோ!
அதோகதி என்று 
பிறக்குது நாட்கள்.

வந்த உன்னால் வேலை இல்லை
வாய்விட்டுப்பேச நாதி இல்லை.
சமைப்பதற்கோ உணவு இல்லை
சாமான் வாங்க காசும் இல்லை.

இதுதான் இன்று வெளிநாடு,
அதுதான் எமக்கோ சுடுகாடு.

கண் கண்ட கனவு ஒன்று 
நாடு திரும்புவோம் என்று.
அதையும் கொண்று இன்று
புதைக்குது கொரோனா நன்று.

வந்த நாடு கதவடைத்தது
சொந்த நாடோ வராதே என்றது.
நாதி இல்லா நடுக்காட்டில்
பட்ட மரம் போல் செழிப்பது ஏனோ.
உழைத்தது எல்லாம் உப்பாக
இளமை இழந்தோம் உரமாக.
இரவினில் சூரியன் வந்துதித்து
உறக்கத்தை கெடுத்தது ஏனோ.

பார்வை இழந்து பாரினிலே
பரிதவிக்கிறோம் பார்த்தாயா.
இறைவா! உன் நெற்றிக்கண் 
எப்போது விழிக்கும்.

எம்மை மன்னிப்பாயா?
மன்னிப்புத்தான் உண்டா?
மயிரென்று நினைத்து 
உன் மானிடத்தை விட்டு விடாதே.
யா ரப்பே! விட்டு விடாதே
 
அலை கடலன
திரண்ட கண்ணீரும்.
அள்ளிக்கொடுக்க 
விரித்த கையுடனும்.
மண்டியிட்டு கேற்கிறோம்.
உன் உம்மத்தை காத்தருள்வாயாக.

- சஹீம் ஹுஸைன் -

2 comments:

Powered by Blogger.