April 10, 2020

நோன்பு பிடிக்கவும், நோன்பு துறக்கவும் உதவிசெய்த இலங்கை இராணுவத்தின் மனிதாபிமானம்


எனக்கு நன்கு பரிச்சயமான கொழும்பைச்சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு #Quarantine_Centre_ல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.. அண்மையில் #Corona_வால் மரணித்த ஒருவரின் சுற்று வட்டதாரத்தில் அவர்கள் இருக்கும் ஒரே காரணத்தால்...

அல் ஹம்துலில்லாஹ் அவர்களுக்கு இதுவரைக்கும் எதுவும் இல்லை...

(09.04.2020) வியாழன் நோன்பு பிடிப்பதற்க்காக புதன்கிழமை மாலைப்பொழுதில் அங்கே பொறுப்பில் இருக்கும் #Army_அதிகாரியிடம் சென்று நாங்கள் நாளை நோன்பு பிடிக்கவேண்டும் (சுன்னத்தான நோன்பு) எங்களுக்கு இரவில் கொடுக்கும் உணவை சற்று தாமதமாக (11:00PM) கொடுக்குமாறு கேட்டுருக்கிறார்கள் (Kind Request)

அதுக்கு அவர் எதற்க்காக அப்படி என்று கேட்டிருக்கிறார்.

இவர்களும் ஷகருடைய நேரத்தில் சாப்பிட்டு நோன்பு பிடிப்பது எங்கள் மத வழக்கம் என்று சொல்லியிருக்கிறார்கள்

மறுபடியும் எப்போது நோன்பை விடுவீர்கள் என்று கேட்டுருக்கிறார் இன்னும் சில கேள்விகளுடன்....

இவர்கள் மாலை அதானுடைய நேரத்தை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்கள்...

எதுவுமே சொல்லாமல் சென்றுவிட்டாராம்...

வழமை போல இரவுநேர சாப்பாடு உரிய நேரத்தில் எல்லோருக்கும் வழங்கப்பட்டதாம்.

இவர்கள் நினைத்தார்களாம் நமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது இந்த சாப்பாட்டை அப்படியே வைத்து ஷகருடைய நேரத்தில் சாப்பிட்டு நோன்பு பிடிப்போம் என்று.

சற்று நேரத்தில் அந்த #Quarantine Center_உடைய #Army_பெரியவர் அங்கு வந்து சொன்னாராம் இந்த சாப்பாட்டை இப்போது சாப்பிடுங்கள் நீங்கள் நோன்பு பிடிப்பதுக்கு அதிகாலை 3:00 AM மணிக்கு மறுபடியும் உங்களுக்கு நாங்கள் சாப்பாடு வழங்குகிறோம் என்று.

அதே போல் சாப்பாடும் வழங்கினார்களாம். வழமையாக கொடுக்கும் சாப்பாட்டை விடவும் அதிகமாக வழங்கப்பட்டதாம் அதற்கும் அவர்கள் சொன்ன காரணம் நீங்க அதிக நேரம் சாப்பிடாமல் இருக்கவேண்டுமல்லவா ஆகவே நன்றாக சாப்பிடுங்கள் என்று.

அதுமட்டுமில்லாமல் நோன்பு திறக்கும் நேரத்தில் பழவகைகளும் இனிப்பு பண்டங்களும் வழங்கினார்களாம்...

ரொம்ப மரியாதையுடனும் நடாத்துகிறார்களாம்.. பெண்களுக்கும் ரொம்ப கண்ணியம் கொடுக்கிராங்களாம்...

இப்படியான நல்உள்ளம் கொண்ட பிற மதங்களையும், மனித உணர்வுகளையும் மதிக்கக்கூடிய மனிதர்கள் எல்லா மதங்களிலும் அதிகமாக இருக்கிறார்கள்.

இன மதமெனே பிரிந்தது போதும் மனிதம் ஒன்றே வாழட்டும்.

Salud #Sri_Lanka_Army

Abdul Gaffoor

12 கருத்துரைகள்:

எங்களது உரிமைகளுக்காகப் போராடுகிறோம் என்று கிளம்புகின்ற முஸ்லிம் கட்சிகள் அடக்கி வாசித்தாலே போதும் எமது உரிமைகளை உறுதிப்படுத்தலாம்.

there are a certain small number nonsense only being behind communal motivation to achieve their personal agenda, otherwise general public mostly good people...

Srilankan peoples are always good but some politician make things worst.

பிரித்துப்பார்த்து பிரிந்து கொண்டது நாம்தான்.
இருப்பவன் சரியாகவிருந்தால்
சிரைப்பவன் சரியாகச்சிரைப்பான்

ALHAMDULILLAH.
This incident and the narration by the Muslim family in quarantine should be an "EYE OPENER" and message to our Muslim Community who, due to the "MISLEADING" of some of our Muslim Journalists, especially some of the members of the Community Media Forums and other individuals who write content to the "yahoo community group" email publications, have been natured against those other Sri Lankans who are sons and daughters (children) of our "MAATRUBOOMIYA" because of the "deceptive and hoodwinking" manupilations of our so-called community civil society leaders and political opportunists, leading us to a situation of being subjected to "RACIAL" hateredness in many ways as Muslims. Added to this has been the bombardness manner in which some of our (half baked) moulavies making sermons from the pulpit of the mosques during the Friday prayers attacking the other communities beyond the framework of Islam. God AlMighty Allah says in the Holy Quran (please correct me if I am wrong) that ALLAH does not burden Muslims with problems, but it is they themselves who create the problems for themselves. If we will live the way Islam has shown us and been good examples as Muslims in society, there is "NO HARM" that would engluf us and God AllMighty Allah will be our "DEFENDER", Insha Allah. A HUMBLE REQUEST BY THE QURANTINED MUSLIMS WITH A SINCERE HEART MEANT MANY TRUE FEELINGS OF UNDERSTANDING TO THE SINHALESE MAJORITY COMMUNITY ARMY OFFICER IN CHARGE OF THE CENTER AND OTHER ARMY PERSONNEL, INCLUDING THE KITCHEN STAFF TO PROVIDE THE NEEDS OF OUR BRETHREN TO FULLFILL THE OBLIGATIONS OF FASTING (optional) THAT DAY. MUSLIMS HAVE TO FACE REALITY AND BEGIN THE CHANGE THEMSELVES. Muslims should not be misguided due to the "MISLEADING" notions and publications of some of our Muslim Journalists, especially some of the members of the Community Media Forums and other individuals who write content to the "yahoo community group" email publications, the bombardness manner in which some of our (half baked) moulavies making sermons from the pulpit of the mosques during the Friday prayers attacking the other communities beyond the framework of Islam. Let the Muslims start the change now, Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice".

Alhamdulillah May allah almighty bless them and their family abundantly.

අප ලක්වාසී සියලු දෙනාම එක්සිව සියලු භේදයන් දුරලන ලාංකිකයෝ වශයෙන් එකමුතුව ජිවත් වෙලා මෙලොවින් සමු ගමු.

අප ලක්වාසී සියලු දෙනාම එක්සිව සියලු භේදයන් දුරලන ලාංකිකයෝ වශයෙන් එකමුතුව ජිවත් වෙලා මෙලොවින් සමු ගමු.

முஸ்லிம்கள் இவ்வாறு ஆடம்பர மற்றவர்களாக செயட்பட்டால் அல்லாஹ்வின் உதவியை நம் கண் முன்னாலேயே காண முடியும்

இலங்கை இராணுவப்படையின் மிகச் சிறந்த செயலை நாம் மனமாரப் பாராட்டுகின்றோம். இந்த பண்பாடு தான் அவர்களை இந்த உயர்ந்த நிலையில் வைத்திருக்கின்றது. அவர்களின் இத்தகைய பண்பும் நன்நடத்தையும் தொடர எமது வாழ்த்துக்கள்.

மானிடம் இன்னும் செத்து விடவில்லை

Mannar Muslim perfectly correct

Post a comment