Header Ads



கொரோனாவுக்கு எதிராக போராடும் நாடுகள் வரிசையில் இலங்கை 3 ஆம் இடம் - அரசாங்கத்திற்கும் பாராட்டு

உலகளாவிய ரீதியில் பல நாடுகள் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக போராடி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் நோயாளிகளை விரைவாக காப்பாற்றும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாமிடத்தில் உள்ளனது.

அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராடும் நிலையில் இலங்கை வலுவாக உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளர்களை விரைவாக காப்பாற்றும் பட்டியலில் ஜேர்மன் முன்னிலையில் உள்ளது. அதற்கமைய ஜேர்மனியில் 33 வீத நோயாளர்கள் காப்பாற்றப்படுகின்றனர்.

இந்த பட்டியலில் அடுத்த நிலையிலுள்ள ஸ்பெயினில் 32.74 வீதமான நோயாளிகள் காப்பாற்றப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

மூன்றாம் நிலையிலுள்ள இலங்கையில் 23.28 வீதமான நோயாளிகள் காப்பாற்றப்படுவதாக புதிய புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இன்றுவரையில் 189 பேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 47 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த பட்டியலில் இத்தாலி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் முறையே அடுத்த நிலைகளை வகிக்கின்றன.

இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாம் கட்ட விரிவாக்கம் சமகாலத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 7ஆம் திகதி வரையில் சுமார் 350 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்படலாம் என சுகாதாரதுறை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.

எனினும் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக அந்த எண்ணிக்கையில் அரைவாசி அளவான நோயாளர்களே இனங்காணப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவலுக்கு எதிராக அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மக்கள் மன நிம்மதி அடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

4 comments:

  1. Saudy Arabia got les death rate and high recovery percentage compared to all those
    Top three.


    666 (94%)
    Recovered / Discharged

    44 (6%)
    Deaths

    ReplyDelete
  2. மேலதிகமாக இனவாதத்தையும் முஸ்லிகளின் மீது திணிக்கிறது!

    ReplyDelete
  3. இவங்கள இவங்களே சும்மா புகழ்ந்து கொள்ளுவதுதான். அப்படி இல்லையென்றாள் இந்தியாவும் சைனாவும் தான் இவங்களை புகழவேண்டும். பண்டமாற்று புகழ்சி இவர்கள் அவர்களைப்புகழ்வதும்.ஒவ்வொரு ஊர்களிளும் தொடர்ச்சியாக Curfew வை போட்டுவிட்டு ரோட்டுகளையும் மூடிவிட்டு அப்பாவி பொது மக்கள் தண்ணீர், உணவு இல்லாமல் படும் துண்பங்களை கூட அசசாங்கம் கண்டுகொள்ள வில்லை.அதிலும் ஒரு பக்க சார்பாக நடக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.