Header Ads



கொவிட் 19 சுகாதார நிதியத்திற்கு, நாமும் பங்களிப்புச் செய்வோம் - இது மனிதாபிமான கடமை


ஓய்வுபெற்ற ஆசிரியரான நுகேகொடயில் வசிக்கும் சரத் குமார குருசிங்க என்பவர் தனது ஏப்ரல் மாத ஓய்வூதிய சம்பளத்தையும், இரு கண்களையும் இழந்த உயன ஹேவகே அசோக தனது சேமிப்பிலிருந்த 5 லட்சம் ரூபாவையும் இன்று (09) கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு செய்தனர். நாடு முகம்கொடுத்துள்ள கடினமான சந்தர்ப்பத்தில் பிரஜைகள் என்ற வகையில் அதற்கு பங்களிக்க கிடைத்தமை ஒரு மனிதாபிமான கடமை என அவர்கள் குறிப்பிட்டனர்.

இன்று பிற்பகலாகும் போது கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 585 மில்லியன் ரூபாவை கடந்திருந்தது.

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார, சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும். சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.

0112354479,011354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலே அவர்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள முடியும்.

மொஹான் கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு

1 comment:

  1. இது பொதுமக்கள்,பெரியவர்கள் பதுக்கிவைத்திருக்கும் பொதுமக்களிடம் சூறையாடப்பட்ட பலநூறு திரில்லியன்களின் ஒரு வீதத்தை இவ்வாறு செலவு செய்தால் கூட இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

    ReplyDelete

Powered by Blogger.