March 11, 2020

தொலைபேசிக்கு சட்டச்சிக்கல் இல்லை - சஜித் அணி

(இரா­ஜ­துரை  ஹஷான்)

ஐக்­கிய மக்கள் சக்தி பொதுத்­தேர்­தலில்  தொலைபேசி  சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தற்கு தீர்­மா­னித்துள்­ளது. சின்னம் தொடர்பில் எவ்­வித சட்டச் சிக்­கல்­களும் ஏற்­ப­டாது.  தேவை­யான ஆவ­ணங்­களை ஆணைக்­கு­ழுவில் சமர்ப்­பித்­துள்ளோம். ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மைத்­து­வத்தில்  மாற்றம் ஏற்­பட வேண்டும் என்ற கோரிக்­கை­யினை    நிறை­வேற்­றி­யுள்ளோம்   என  முன்னாள்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுஜீவ  சேன­சிங்க தெரி­வித்தார்.

ஐக்­கிய மக்கள் சக்­தியின் காரி­யா­ல­யத்தில்  இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர்  சந்­திப்பில்  கலந்துக் கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே    அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

 ஐக்­கிய  மக்கள்  சக்தி ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ராக தோற்­று­விக்­கப்­பட்­டது. அல்ல   அனைத்து  தரப்­பி­னரும் ஒன்­றி­னைந்து  பொதுத்­தேர்­தலில் போட்­டி­யிட வேண்டும். என்ற   கார­ணத்­தி­னா­லேயே      கூட்­ட­ணியை  ஸ்தாபித்தோம். ஆனால்    ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வ­ரி­ட­மி­ருந்து  எதிர்­பார்க்­கப்­பட்ட அளவு ஆத­ரவு கிடைக்கப் பெற­வில்லை.    இன்றும்  அவர் தரப்பில் உள்ள ஒரு   சிலர்   ராஜ­ப­க்ஷர்­க­ளுக்கு ஆத­ர­வா­கவே செயற்­ப­டு­கின்­றார்கள்.

  ஐக்­கிய    மக்கள்  சக்தி  இடம்­பெ­ற­வுள்ள பொதுத்­தேர்­தலில்   தொலை பேசி  சின்­னத்தில் போட்­டி­யிட தீர்­மா­னித்­துள்­ளது.    சின்னம் தொடர்பில் எவ்­வித   சட்ட  சிக்­கல்­களும் ஏற்­ப­டாது.  தேர்தல் ஆணைக்­கு­ழு­விற்கு அனைத்து ஆவ­ணங்­க­ளையும் சமர்ப்­பித்­துள்ளோம். ஐக்­கிய  மக்கள் சக்­திக்கு  உள்­ளு­ராட்சி மன்ற  உறுப்­பி­னர்­களில் 95 சத­வீ­த­மானோர்  ஆத­ரவு  வழங்­கு­வ­தாக குறிப்­பிட்­டுள்­ளார்கள்.

 25  வருட காலத்­திற்கும் அதி­க­மாக   ஐக்­கிய தேசிய கட்­சியின்  தலை­மைத்­து­வத்தில் மாற்றம் ஏற்­ப­டுத்­தாத கார­ணத்­தி­னா­லேயே  ஜனா­தி­பதி  பத­வியை     பெற்றுக் கொள்­ளவும்  அர­சாங்­கத்தை  தக்­க­வைத்துக் கொள்­ளவும் முடி­யாமல் போனது.  ஐக்­கிய தேசிய  கட்­சியின் ஆத­ர­வா­ளர்­களின் கோரிக்­கை­கக்கு அமை­யவே  தற்­போது  பாரிய மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம்.

ஜனா­தி­பதி தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்சி தோல்­வி­ய­டைந்­ததை தொடர்ந்து    ஐக்­கிய தேசி­ய­கட்­சியின்  ஆத­ர­வா­ளர்கள்  கட்­சியின்  தலை­மைத்­து­வத்தில் மாற்றம் ஏற்­பட வேண்டும். என்ற கோரிக்­கை­யினை மாத்­திரம் முன்­வைத்­தார்கள் . இடம்­பெ­ற­வுள்ள பொதுத்­தேர்­தலில் வெற்றிப் பெற வேண்­டு­மாயின் கட்­சியின் தலை­மைத்­து­வத்தில் மாற்றம் ஏற்­பட வேண்டும் என்று  குறிப்­பிட்­டார்கள். இத­னையே ஐக்­கி­ய­தே­சிய கட்­சியின்  செயற்­கு­ழுவில் தொடர்ந்து  வலி­யு­றுத்­தினோம்.  ஆனால்  அவர்கள் எவ்­வித விட்டுக் கொடுப்­புக்­க­ளையும் செய்­யாமல் தொடர்ந்து  ராஜ­ப­க்ஷர்­க­ளுக்கு ஆத­ர­வா­கவே செயற்­பட்­டார்கள்.

இன­வா­தத்தை அர­சியல் பிர சார­மாக்கி ஆட்­சிக்கு வந்த அர­சாங்­கத்தின் பல­வீனம்  மூன்று  மாத  காலத்­திற்குள்  வெளிப்­பட்டு விட்­டது. 69 இலட்ச மக்­களும் இன்று அர­சாங்­கத்தின் செயற்­பாட்டை எதிர்க்­கின்­றார்கள்.  அனை­வ­ரது   அபிப்­ரா­யங்­க­ளுக்கும் அமைய  பொதுத்­தேர்­தலில்  எம்மால்  வெற்­றிப்­பெ­ற­மு­டியும்.

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ குடும்ப ஆட்­சிக்கு   தற்போது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து  வருகின்றார். சஜித் பிரேமதாஸவை பிரதமராக்கி இருவரும் ஒன்றினைந்து செயற்பட முடியும். நாட்டில்  தூய அரசியல் நிர்வாகத்தை ஏற்படுத்துவதே எமது  பிரதான எதிர்பார்ப்பாகும்.  அனைத்து தரப்பினரையும் ஒன்றினைத்து  பலமான அரசாங்கத்தை நிச்சயம் கட்டியெழுப்புவோம். என்றார்.

0 கருத்துரைகள்:

Post a comment