Header Ads



தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் வரை, வேட்பாளர்களுக்கான விருப்பு எண் கிடையாது

(எம்.மனோசித்ரா)

பொதுத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தல் சனிக்கிழமை நள்ளிரவு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் வெளியிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் சட்டம் இலக்கம் 1 இன் 1981 ஆம் பிரிவின் 24(3) ஆம்  சரத்தின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு காணப்படும் அதிகாரத்திற்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்தோடு ஏப்ரல் 30 ஆம் திகதிக்குப் பின்னரான 14 நாட்களுக்குப் பின்னர் தேர்தலை நடத்துவதற்கான தினத்தை ஆணைக்குழு அறிவிக்கும் என்றும் அவ்வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்படும் வரை வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் வழங்கப்பட மாட்டாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

2 comments:

Powered by Blogger.