Header Ads



தூய்மையான கரங்களுடன் வந்ததைபோலவே, தூய்மையாக விடைபெறுவதாக நம்புகிறேன் : கரு ஜயசூரிய

(ஆர்.யசி)

கடந்த நான்கரை வருடங்களில் பாராளுமன்றத்தின் ஜனநாயகத்துக்காக தன்னால்  விசேட சேவையாற்றக் கிடைத்தது. இந்தப்பதவிக்கு தூய்மையான கரங்களுடன் வந்ததை போன்றே விடைபெற்றுச் செல்லும் போதும் அவ்வாறே தூய்மையாக செல்வதாக நம்புவதாக எட்டாவது பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

அரசியலில் பிரவேசிக்கும் அனைவரும் தூய்மையாக செயற்பட முடியுமாயின் எமது நாடு இதனை விடவும் அதிஷ்டம் மிக்கதாக மாறும். அதற்காக அடுத்த பாராளுமன்றத்தில் கௌரவ உறுப்பினர்கள் என அழைக்கக் கூடிய நபர்களை கொண்ட பாராளுமன்றமொன்றை காணவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் எனவும் சுட்டிக்காட்டினார். 

எட்டாவது பாராளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் நிகழ்வு இன்று -06- பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், 

சவால் மிக்க காலப் பகுதியில் பாராளுமன்றப் பணியாளர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் ஊடாக பாரந்துபட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

 அவற்றைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தலையெடுத்த இனவாத தீயைத்தணிப்பதற்கு பாராளுமன்றம் குழுக்கள் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கியிருந்தன.

சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட பணியாளர்கள் வழங்கிய  முழுமையான ஒத்துழைப்புக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் இந்தப் பதவிக்கு தூய்மையான கரங்களுடன் வந்தது போன்றே விடைபெற்றுச் செல்லும் போதும் அவ்வாறே செல்வதாக நான் நம்புகிறேன்.

அரசியலில் பிரவேசிக்கும் அனைவரும் தூய்மையாக செயற்பட முடியுமாயின் எமது நாடு இதனை விடவும் அதிஷ்டம் மிக்கதாக மாறும். அதற்காக அடுத்த பாராளுமன்றத்தில் கௌரவ உறுப்பினர்கள் என அழைக்கக் கூடிய நபர்களை கொண்ட பாராளுமன்றமொன்றை காணவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என அவர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.