Header Ads



இம்முறை புத்தளத்திற்கான, பாராளுமன்ற பிரதிநிதியை பெறல்

மாஷா அல்லாஹ். அல்லாஹ் நம்யாவரினதும்  இஃலாஸான இத்தூய பணியை பொருந்திக்கொள்வானாக ஆமீன்.                      

புத்தள பெரியபள்ளி, புத்தள ஜம்இயதுல் உலமா ,      சமூக நன்நோக்குகளர்கள் ,சிவில் அமைப்புக்கள், அவரவர்கட்சிசார்பானவர்களின் ஒத்துழைப்புக்கள் முயற்சிகளினால் , சிறுபான்மைக்கட்சிகளின் தலைமைகளும், ஏனைய கட்சிகளின் சிறுபான்மை உறுப்பினர்கள் யாவரும் ஓரணியாக ஒத்துமையாக பயணிக்க வந்த விடயமானது புத்தள  வரலாற்று முக்கிய விடயமாகும். அல்ஹம்துலில்லாஹ்.      

 எனவே     இந்த முறையாவது முறையாக பயணித்து புத்தள பாராளுமன்றத் தேர்தலில்  காத்திரமான பிரதிநிதுத்துவத்தைப் பெறுவதற்காக புத்தள பெரிய பள்ளி,புத்தள ஜம்இயதுல் உலமா சபைகளினதும்,சிவில் அமைப்புக்களினது பங்களிப்பு முக்கியத்துவம் மிக்கதாகும். இவர்களின் முதல்கட்ட நிகழ்வு பூர்த்தியாகவுள்ளது.   இச்சந்தர்ப்பத்தில் புத்தள வாழ் யாழ் கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில் சம்மேளனம் புத்தள பெரியபள்ளி, புத்தள ஜம்இயதுல் உலமா சபை , சிவில் சமூகவியளாலர்கள் குழுக்களுக்கிடையிலான சுமூகமான , சினேகபூர்வமான, மானசீகமான நிலைகள் தொடர்பாக , இதயசுத்தியான சந்திப்பு சுமார் மூன்று மணித்தியாலங்களாக இடம்பெற்றது. 

இக் கலந்துரையாடலின் பின்னர் ஏகமனதாக இம்முறை புத்தளத்திற்கான பாராளுமன்றம் பிரதிநிதியைப்பெற புத்தள பெரியபள்ளி, புத்தள ஜம்இயதுல் உலமா சபை , சிவில் அமைப்பு எடுக்கும் பொதுவான பொதுச்சின்னத்திற்கு   பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்குவதென இணக்கம் காணப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.       

   இந்த  கலந்துரையாடலில்  எம்மவர்கள் இழந்த எமது இழப்புக்களுக்கு இழப்பீடுகளும் எதிர்காலத்தில் எமது உரிமையுடனான இங்கு மீள்குடியேற்றங்களின் இருப்புத்தொடர்பாகவும் தெரியப்படுத்தவே இந்த பெயர்தாங்கிய அடையாளம் என தெரிவுபடுத்தப்பட்டது. நாங்கள் யாவரும்  புத்தள வாழ்பிரஜைகள் என்றும் எல்லாவிடயங்களிலும் இரண்டரக்கலந்துள்ளோம். ஒற்றுமையான ஈமானிய சமூகமாக ஒற்றுமையாக பணிப்போம் . நல்லெண்ணங்களுடன் வாழும் சமூகம் என  ஒருமுகப்படுத்ப்பட்டோம். 

இவ்வாறான  சந்தர்ப்பத்தில்எமது யாழ், கிளிநொச்சி மக்களாகிய எங்களது வாக்கு வங்கிகள் யாவற்றையும்பூரமாக புத்தள பிரதிநிதித்துவத்தைப் பெற திடசந்தர்ப்பம் கொள்வோமாக . இன்ஷா அல்லாஹ். இதே  போல வன்னி மக்களும் பூரணமாக  பங்களிப்பு வழங்குமாறு அன்பாக வேண்டுகின்றோம்.    இந்த நிலையில்            எமது நிலைப்பாடுகளையும் அபிலாசைகளையும் உள்வாங்கிக்கொண்டுள்ளும்  பிரதிநிதிகளை பாராளுமன்ற பிரதிநிதிகளாக களம்இறக்குவதில்   கவனம் செலுத்த வேண்டிய பாரிய பொறுப்பு சிறுபான்மைக்கட்சியினரின் தலைமைகளுக்கு உள்ளதை தெரியப்படுத்துகின்றோம்.  

இது காலததின் தேவைப்பாடாகவும் உள்ளது. எனவே புத்தள பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கான காத்திரமானதம் தூரநோக்கானதமான தீர்மானங்களை சிறுபான்மைக்கட்சிகள் உடன் செயற்பட்டு ஒற்றுமையுடனான பிரதிநிதித்துவத்தை பெற தேவையுள்ளதை உணர்ந்து விட்டுக்கொடுப்பு செய்து ஒற்றுமையாக செயல்படுமாறு அன்பாக வேண்டுகின்றோம். 

கட்சிகளுகக்கிடையிலான காழ்புணர்சிகளை புறந்தள்ளி, பகுதிவாத, பிரதசேவாத, வகுப்புவாதங்களுக்கு அப்பால் , கடந்தகால நிகழ்வுகளின் விடயங்களை வைத்து தர்க்கிக்காமல் , பொதுவான நியதிகளின் அடிப்படையில் ஏகமனதாக எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக சிந்தித்து இறுதித்தீர்வுக்காக  முன்வருமாறு சம்மந்தப்பட்ட கட்சிசார்பான யாவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம். இத்தருணமாவது புத்தள வாழ் மக்களாகிய நாங்களும், அன்பான புத்தள வாழ் மக்கள் யாவரும் ஒத்துழைத்து,ஒன்றுபட்டு இப்புத்தள மண்ணின் இருப்புக்களை காக்க வாருங்கள்.             

அன்பான உறவுகளே. எனவே எமது இஃலாஸான இத்தூயபணிதொட எல்லாம் வல்ல றஹ்மான் கிருபை செய்வானாக.

ஆமீன்.    

புத்தள வாழ் யாழ் கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில் சம்மேளனம்

No comments

Powered by Blogger.