Header Ads



மட்டக்கள்ப்பு வீதியில் பியர் வெள்ளம், ஓடிவந்து கவலையோடு அவதானித்த பிரியர்கள்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பு நகரில்    பியர் மதுபானங்களை ஏற்றி வந்த வாகனத்தின் தட்டி தானாகத் திறந்து கொண்டதால் அவ்வாகனத்திலிருந்த பெருமளவிலான பியர் போத்தல்கள் தெருவில் விழுந்து உடைந்து நொருங்கி  பியர் வெள்ளமாகப் பரவியது.

இச்சம்பவம் வியாழக்கிழமை 05.03.2020 பகல் மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது.

இச்சம்பவத்தில் பெருந் தொகையான பியர் போத்தல்கள் உடைந்து தெருவில் பியர் ஓடியது.

அப்பகுதியில் தொடர்ச்சியாக பியர் வாசம் வீசத் தொடங்கியதால் பியர் பிரியர்கள் ஸ்தலத்திற்கு ஓடி வந்து பியர் வெள்ளம் வீதியில் ஓடுவதை கவலையோடு அவதானித்துக் கொண்டு நின்றனர்.



No comments

Powered by Blogger.