Header Ads



பிரான்சில் கொரோனாவுக்கு மரணமானவரின், உறவினர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

பிரான்சில் கொரோனா வைரசின் கோரத்திற்கு பலியானவர்களின் இறுதி நிகழ்வினை நடத்துவதற்கு பிரான்சு அரசு மனிதாபிமான அடிப்படையில் அனுமதி வழங்கியிருப்பதாக பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்விற்கு 45 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்ட அதேவேளை இறுதி நிகழ்வில் மிக நெருங்கிய உற்ற உறவுகள் சிலரே கலந்துகொள்ள முடியும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.

எமக்கு நடந்த இந்தக் கொடுமை உங்களுக்கும் ஏற்படக்கூடாது எனவே அனைவரும் அரசின் சட்டங்களுக்கு மதிப்பளித்து முடிந்தளவிற்கு வீட்டில் இருக்குமாறு ஒரு வேண்டுகோளாக குறித்த உறவினர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை பிரான்சில் கொரோனா வைரசினால் கடந்த 24.03.2020 செவ்வாய்க்கிழமை சாவடைந்த பொன்னன் குலசிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வு குறித்து அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விபரம் வருமாறு:-

எனது கணவரும் /எங்களுடைய பாசமிகு தந்தையுமான பொன்னன் குலசிங்கம் கொரோனா வைரசால் தாக்கப்பட்டு கடந்த 24.03.2020 அன்று மரணித்துவிட்டார்.

அவரது இறுதி நிகழ்வுகள் 31.03.2020 செவ்வாய்கிழமையன்று இடம்‌பெறவுள்ளது.

துரதிஷ்டவசமாக பிரான்சில் தற்போது நடைமுறையிலுள்ள அரச ஒழுங்கு விதிகளின்படி, எல்‌‌லோரும் ஒன்று கூடுவது சாத்தியமில்லாமல் இருக்கிறது.

என்னுடைய கணவர்/ எங்களுடைய தந்தை, எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி மற்றவர்களுக்கு உதவி புரிந்து வந்தவர்.

எங்களை மீளா துயரில் ஆழ்த்துவது என்னவென்றால், அவரது அன்புக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் அவரது இறுதிநிழ்வில் ஒன்று கூடி,அவரை வழியனுப்பி வைக்க முடியாதுள்ளது தான்.

அவரை அறிந்தவர்கள், அவரது எழிமையையும், அவருடைய அன்பையும் ஆழமாக அறிந்திருப்பர்.

பிரான்சில் தற்போது நடைமுறையிலுள்ள அரச விதிகள் விலக்கப்படும் போது (அரச விதிகளின் அடிப்படையிலான) சுகாதாரப் பிரச்சனைகள் இல்லாத பட்சத்தில் அவரது பிறந்த நாளுக்கு அடுத்த நாளான 12.09.2020 சனிக்கிழமை நாம் ஒரு ஒன்று கூடலை ஏற்பாடு செய்ய எத்தனித்திருக்கிறோம்.

இந்த நேரத்தில் நீங்கள் எங்களுடன் பகிர்ந்துகொண்ட இரங்கல் தகவல்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள் எனவும் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

2 comments:

  1. சோகமான ஆனாலும் அருமையான தகவல்.இதனை இலங்கைச் சமூகம் படிப்பினையாக கருதவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.