Header Ads



வெடிகுண்டு சத்தம் கேட்டு சிரிக்கும் குழந்தை


சிரியாவில், துருக்கி நடத்திய தாக்குதலின் சத்தத்தை கேட்டு குழந்தை ஒன்று சிரிக்கும் வீடியோ வைரலானது.

அந்த வீடியோவில் “சிரிய நாட்டை சேர்ந்த தந்தையான அப்துல்லா முஹம்மத் தன் குழந்தை சல்வாவுக்கு குண்டுகளின் சத்ததிற்கு சிரிக்க கற்றுக் கொடுக்கிறார்”. அதை பார்த்த அனைவரும் சிரியாவில் குழந்தைகளின் மோசமான நிலையை கண்டு கலங்கினர்.

இந்நிலையில், அந்த குடும்பம் எல்லையை கடக்க துருக்கி அரசாங்கம் உதவியுள்ளது.

துருக்கி ஆதரவு பெற்ற சிரியா புரட்சி படைக்கும் சிரியா அரசுக்கும், இட்லி பகுதியில் சண்டை நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து ஏறத்தாழ ஐந்து லட்சம் மக்கள் சிரியா-துருக்கி எல்லையில் அடைக்கலம் புகுந்துள்ளனர். அதில், ஒன்றுதான் அப்துல்லாவின் குடும்பம். அவர்கள் தற்போது தெற்கு துருக்கியில் உள்ள ஒரு அகதிகள் முகாமில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அவர்கள், துருக்கியில் பாதுகாப்பாக வந்த மகிழ்ச்சியில் தந்தை அப்துல்லா, குழந்தையை தூக்கி கொஞ்சும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து “ஸ்கை நியூஸ்க்கு” தந்தை அப்துல்லா அளித்த போட்டியில் எனது மகளின் உளவியல் நிலை பாதிக்காமல் இருக்க இதுபோன்ற விளையாட்டை அவளுக்கு கற்றுக்கொடுத்தேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், அவள் குழந்தை. அவளுக்கு போர் என்றால் என்ன என்று தெரியாது. அவளுக்கு பயத்தை கற்றுக்கொடுத்தால் உடல் நிலை பாதிக்கப்படலாம் எனவே இந்த விளையாட்டை பதிவு செய்தேன் என்று அவர் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


2 comments:

Powered by Blogger.