March 25, 2020

14 நாட்கள் முகாமில் இருந்த, பசீலின் அனுபவம் - அவதூறு பரப்பியவர்களை மறக்கவில்லை என்கிறார்

உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் Covid 19 உடைய வக்கிரத்தால் பாதிக்கப்பட்டுள்ள யாவருக்காகவும் பிரார்த்தனையுடன் குறிப்பாக நான் தொழில் புரியும் மதிப்பிற்குரிய நாடான இத்தாலி மக்களுக்காக பிரார்த்தித்தவனாக எழுதுகிறேன்.

கண்டியில் மடவளையை வசிப்பிடமாக கொண்ட நான் கடந்த 10 ஆம் திகதி இத்தாலியிருந்து இலங்கை வந்தேன். முந்தைய நாள் எனது மனைவி மற்றும் பிள்ளைகள் இலங்கை வந்திருந்தனர்

இலங்கையில் கால் வைக்கும் முன்னரே Covid 19 உடைய ஆபத்தை உணர்ந்திருந்த நாம் இலங்கையில் கால் பதித்ததும் அடுத்த கட்ட நடவடிக்கையாக Covid 19 இற்கு எதிராக அரசாங்கம் காட்டியுள்ள வழிமுறைகளை பின்பற்றத் தொடங்கினோம்.

அவ்வகையில் 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்த தனிமைப் படுத்துதல் முகாமிற்கு அனுப்பும் நடவடிக்கைக்கு அமைய நான் பொலநறுவையிலுள்ள முகாமிற்கு அனுப்பப்பட்டேன். எனது மனைவி மற்றும் பிள்ளைகள் PHI யின் கண்கானிப்பில் எனது மனைவியின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அத்துடன் எமது வருகையை முறையாக பொலிஸில் பதிவு செய்தோம். அத்துடன் எனது மனைவி பிள்ளைகளின் நிலமைகளை உருதிப் படுத்துமுகமாக Covid 19 தொற்று தொடர்பான வைத்திய பரிசோதனையையும் மேற்கொண்டோம்.

அல்லாஹ்வின் கிருபையால் எனது மனைவி பிள்ளைகளுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என்பது வைத்திய அறிக்கையில் உறுதி செய்யப் பட்டது. புகழ் அல்லாஹ்வுக்கே.

இன்றுடன் (25-03-2020) எனக்காக விதிக்கப் பட்டிருந்த 14 நாட்கள் நிறைவு பெற்றது. அல்லாஹ்வின் அருளால் Covid 19 தொற்றிலிருந்து பாதுகாக்கப் பட்டது உறுதி செய்யப் பட்டவனாக எனது குடும்பத்தவர்களையும் நண்பர்களையும் காண ஆவலுடன் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறேன்.

முதலில் எமக்காக துஆ செய்தவர்களுக்கும், தொலைப் பேசியினூடாக ஆறுதல்கள், ஆலோசனைகள் வழங்கியவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

தனிமைப் படுத்தப் பட்ட நிலையங்களில் எமக்கு உபகாரம் செய்தவர்களுக்கும், Covid 19 ஐ ஒழிப்பதற்காக பாடுபடும் அரசுக்கும், பாதுகாப்புப் பிரிவினர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எமக்கு அவதூறு கூறியவர்களையும் நான் மறக்கவில்லை.  தாம் ஒரு நலன் விரும்பி, ஊருக்கு நல்லது செய்பவர்கள் என்ற போர்வையில் இருக்கும் சிலரே இவ்வாறு அவதூறு கூறுவது கண்டறியப்பட்டது. இவர்கள் விடயத்தில் நான் கூறும் அறிவுரை என்னவென்றால், இவர்களை ஒரு நிரோதான செயல்திட்டத்திற்கு அனுப்பி எடுக்க வேண்டும்.

இவர்களை அப்படியொரு செயல்திட்டத்திற்கு அனுப்புவது சிரமம். ஊருக்கு ஒரு அபிலிங்கொய்யா இருக்கின்றது போல வீதிக்கொரு அபிலிங்கொய்யா இருப்பர்.

இவர்களை என்ன செய்ய வேண்டும் என்றால், இவர்களது மூளையை எடுத்து dettol போட்டு சலவை செய்து எமது கைகளில் அவர்களது கிருமிகள் தொற்றா வண்ணம் -10 degree ல் ஒரு ரெஜிபோம் பெட்டியில் freeze பண்ணி ஒரு 14 நாட்கள் நிரோதான செயல்திட்டத்திற்கு அனுப்பி எடுத்தால் நல்லது என்பது எனது ஆலோசனை. எந்தளவுக்கு என்றால் மடவளையின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

இவர்களை இனங்காண்பது வெகு இலகு. ஏனெனில் அவதூறு பரப்புபவன் ஒருவர் ஒருவரிடம் சொல்வது தானே அவதூறு. அப்படியிருக்கும் போது சொன்ன வர்களிடமே திரும்ப நினைவு படுத்துங்கள் இது உங்களுக்கு தான் சொல்லப்பட்டது என்று. ஏனென்றால் தன்னைத் தானே திருத்திக் கொள்ளும் வாய்ப்பாக அது அமையக்கூடும்

Fazeel Cassim
25/03/2020

7 கருத்துரைகள்:

Nallawarhal kettawarhal ellorukahavum dua saivom

Yes brother may Allah bless you and your family
Kaluthaigal Kathattan saiyum

மேலும் மேலும் நலம் பெற, வளம் பெற
வாழ்த்துக்கள்!

Post a Comment