Header Ads



இலங்கையில் கொரோனா நோயாளர், எண்ணிக்கை 10 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது 10  ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இன்றையதினம் மாத்திரம் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளானவர்கள் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது.

இதனால் பொதுமக்கள் அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் சுகாதார நடவடிக்கைகளை கடைப்பிடித்து அரசாங்கம் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நேற்றையதினம் 5 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், இன்றையதினம் மாலை  44 , 43 வயதுடைய இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

குறித்த கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இத்தாலியில் இருந்து வருகை தந்துள்ளதோடு , ஒருவர் கண்டக்காடு மற்றும் சிலாபம் நாத்தாண்டி பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

இதையடுத்து 7 ஆக அதிகரித்த கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, சிறிது நேரத்தில் 8 ஆக அதிகரித்தது.

இத்தாலியில் இருந்து கடந்த 7 ஆம் திகதி இலங்கை வந்த 42 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மேலும் இரு பெண்களுக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இலங்கையில் இதுவரை 10 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

காய்ச்சலுக்காக சிகிச்சைபெற்று வந்த 17 வயதுடைய யுவதியொருவருக்கும் கடந்த 7 ஆம் திகதி இத்தாலியில் இருந்து இலங்கை வந்த 56 வயதுடைய பெண்ணொருவருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தொற்றுக்கு ஆளான ஒருவரின் உறவுக்கார பெண்ணே 17 வயதுடைய யுவதி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.