Header Ads



பாராளுமன்றத்திலுள்ள முஸ்லிம் உறுப்பினர்களை ஒன்றுபடுத்தி

தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில், சிறிய மற்றும் சிறுபான்மை அரசியல் கட்சிகள் சிவில் சமூக அமைப்புகள் என்பவற்றையூம் தொடர்புபடுத்தி கூட்டாகச் செயல்படுவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி சீர்தூக்கி பார்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது பற்றி குறிப்பிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், சமூகத்தில் வன்முறையோடு கூடிய தீவிரவாதம் தலைதூக்காமல் இருப்பதற்கு பாராளுமன்றத்திலுள்ள முஸ்லிம் உறுப்பினர்களை ஒன்றுபடுத்தி சிறப்பாக பங்களிப்புச் செய்வது பற்றிய தமது முன்னெடுப்புக்கு ஏற்கனவே உறுப்பினர்களிடமிருந்து போதிய ஆதரவூ தெரிவிக்கப்பட்டுள்ளதாகவூம் கூறினார். 
இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர் டன்ஜா கொங்ரிஜிப் செவ்வாய்க்கிழமை (11) தம்மைச் சந்தித்து கலந்துரையாடிய போது ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.  
இதற்குச் சற்று முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக் குழுவினரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்து உரையாடியிருந்தனர். அவர்களுடனும் பல்வேறு பயனுள்ள கருத்துக்களை அவர் பரிமாறினார். தற்போது இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினரும், இங்குள்ள அதன் பிரதிநிதிகளும், அதில் பங்குபற்றினர். 
இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, நாட்டுப்பற்று என்பவற்றின் முக்கியத்துவம் பற்றியூம் உரையாடப்பட்டது. தாம் செனகல் நாட்டில் நெதர்லாந்தின் தூதுவராக முன்னர் பணியாற்றிய காலத்தில் பெரும்பான்மை முஸ்லிம் மக்களுடன் பழகிய அனுபவம் உண்டெனவூம் தூதுவர் கூறினார். 
நெதர்லாந்துத் தூதுவர் டன்ஜா கொங்ரிஜிப், பாராளுமன்றத்திலும் ஏனைய மட்டங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் உரிய முறையில் இடம்பெற வேண்டியதன் அவசியத்தை கவனத்திற்கு கொண்டுவந்த போது,அதுபற்றிய விளக்கங்களை ஹக்கீம் வழங்கினார். பெண்களுக்கான தொழில் சந்தை வாய்ப்புகள், போதிய வேதனம் வழங்கப்படுதல், அவர்களது நல உரிமைகள் பேணப்படுவதின் அவசியம் என்பன பற்றிம் பரஸ்பரம் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

1 comment:

  1. Be Aware of These foreigners...

    They have long term plan against Muslims. If they are so kind toward Muslims, see how the Muslims in their countries are treated first, before expecting good from them.

    ReplyDelete

Powered by Blogger.