February 23, 2020

மன்னார் பிரதேசத்தில் 2000 தமிழ்ப்பெண்கள், இஸ்லாமியர்களைத் திருமணம் செய்துள்ளனர் - IBC

மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 26 தமிழ் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களைத் திருமணம் செய்துள்ளனர். 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டு மாவட்டச் செயலகம் பிரதேச செயலக ரீதியாக திரட்டிய தரவுகளின்படி இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 71 ஆயிரத்து 868 முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அவர்களில் 34 ஆயிரத்து 494 பேர் ஆண்கள். 37 ஆயிரத்து 374 பேர் பெண்கள்.

71 ஆயிரத்து 868 முஸ்லிம்களில் 69 ஆயிரத்து 854 பேரே இஸ்லாமியர்கள். அவர்களில் 34 ஆயிரத்து 506 பேர் ஆண்கள். 35 ஆயிரத்து 348 பேர் பெண்கள்.

2 ஆயிரத்து 26 தமிழ்ப் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களை திருமணம் செய்துள்ளனர். 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்துள்ளனர் என்று அந்தத் தரவுகள் கூறுகின்றன.

8 கருத்துரைகள்:

தமிழ் இனவாத பக்கங்களில் வந்த ஆதாரமற்ற செய்தியை ஏன் பகிர்ந்தீர்கள்.? தமிழ் பயங்கரவாதிகளுக்கிடையில் மன்னாரில் இடம் கிருஸ்துவ இந்து மத முரண்பாட்டை திசைதிருப்ப கிருஸ்துவ மிஷனெரிகளால் வெளியிடப்பட்ட செய்தி இது

"எவர்களுக்கு நாம் (முன்னர்) வேதத்தை அளித்தோமோ, அவர்கள் (நபியே!) உம் மீது இறக்கப்பட்ட (இவ்வேதத்)தைப் பற்றி மகிழ்வார்கள்;

எனினும் இதன் சில பகுதிகளை மறுக்கிறவர்களும் (அவர்களுடைய) கூட்டதில் இருக்கிறார்கள்.

(அவர்களை நோக்கி:)நான் ஏவப்பட்டிருப்பதெல்லாம், அல்லாஹ் - (ஒருவனையே) வணங்க வேண்டும்; அவனுக்கு (எதனையும், எவரையும்) இணைவைக்கக் கூடாது என்பது தான்;

நான் (உங்களை) அவன் பக்கமே அழைக்கின்றேன்; அவன் பாலே (என்) மீட்சியும் இருக்கிறது” என்று (நபியே!) நீர் கூறுவீராக."

(அல்குர்ஆன் : 13:36)
www.tamililquran.com

மன்னார் மாவட்டத்தில் 2026 தமிழ் பெண்களும் 12 தமிழ் ஆண்களும் மதம்மாறி திருமணம் செய்த சேதி மன்னாரிலும் வவுனியாவிலும் குறிப்பாகவும் இலங்கை புலம்பெயர் தமிழர் மத்தியில் பரவலாகவும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுபற்றி நான் பலருடன் விவாதிதிருக்கிறேன். ஏனைய மதங்களுக்கிடையிலான மதமாற்றங்களில் இன மற்றம் இடம்பெறுவதில்லை என்பதையும் மேலும் அத்தகைய திருமணங்கள் விவாகரத்துக்கள் ஜீவனாம்சங்கள் பொதுச் சட்டத்தின்கீழ் இடம்பெறுகின்றன என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள். முஸ்லிமாக மாறும்போது இன மாற்றம் ஏற்படுகிறது என்பது இப்பிரச்சினையின் தீவிரத்துக்குக் காரணம். இதனால்தான் சிங்களவர் தமிழர் மலையகதமிழர் மத்தியில் முஸ்லிம் விசேட சட்டம் ரத்து தொடர்பான விவாதம் முன்னிலைப்பட்டுள்ள தருணத்தில் இத்தகைய செய்திகள் முஸ்லிம்களை தனிமைப்படுத்துவதாக உள்ளது. என்னோடு பேசிய சிங்கள ஊடகவியலாளர்கள் இலங்கை மட்டத்தில் முஸ்லிம் தனிச் சட்டத்தை துஸ்பிரயோகம் செய்து சிங்கள பெண்களை மதம்மாற்றும் நிகழ்வுகளை தாங்கள் தடுக்கபட்டுவிட்டதாக தெரிவித்தனர். ஆனால் வளைகுடா நாடுகளில் வைத்து இன்னமும் சிங்கள பெண்களை மதம்மாற்றி திருமணம் செய்யும் நிகழ்வுகள் தொடர்வதாக கோபத்தோடு சொன்னர்கள். இந்த விடயம் முஸ்லிம்களை சிங்களவர் மத்தியில் மட்டுமன்றி தமிழர், மலையக தமிழர் மத்தியிலும் தனமைப் படுத்தியுள்ளது. மன்னார் வவுனியா மாவட்டங்களில் தமிழ் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் உறவுகள் மிக மோசமாக சீர்குலைந்துள்ளது. நாட்டு நிலமையைக் கருத்தில் கொண்டு முஸ்லிம்கள் மத்தியில் இவ்விடயம் தொடர்பாக விரிவான ஆய்வும் விவாதங்களும் தீர்மானங்களும் இடம்பெறவேண்டுமென கேட்டுக்கொள்வது எனது கடமை என கருதுகிறேன்.

So, what. its nature.not only srilanka.

ஒரு முஸ்லிம் ஒரு முஸ்லிமைத்தான் திருமணம் திருமணம் செய்யலாம். அதற்கு மதம் மாற்ற வேண்டிய அவசியமில்லை. மதம் மாறிவந்தால் திருமணம் செய்வார்கள். மதம் மாற விரும்பாதவர்கள் தத்தமது மதத்தில் வரனைத்தேடிக்கொள்ளலாம். அடித்துக் கட்டாயப்படுத்தி கட்டி இழுத்துக்கொண்டு வந்து திருமணம் செய்து விட்டதுபோன்று பிதற்றிக்கொள்கின்றீர்.

இத்தகைய சூழல் பற்றி தனிபட்ட கருத்துகள் இருக்கலாம். எனினும் ஒரு பல்தேசிய இன நாடு என்பதால் இவ்விடயம் தொடர்பாக முஸ்லிம்கள் மத்தியில் ஆய்வும் ஆக்கபூர்வமான விவாதங்களும் மிக மிக அவசியம்.

இந்த கலாச்சார சீரழிவுக்கு காரணம் அந்த பெண்களின் பெற்றோரும் அயலவர்களும்தான் .இந்தவிதமான சீர்கேட்டை தட்டிக்கேட்டு உடனடியாக தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும் .இனியாவது தமிழ் அமைப்புக்கள் விழிப்புடன் செயல்படாவிட்டால் இவ்வாறான மாபெரும் கலாச்சார சீரழிவுகளை தடுக்க முடியாமல் போய்விடும்.

Post a Comment