Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான டெல்லி வன்முறை, உயிரிழப்பு 18 ஆக அதிகரிப்பு

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக வடகிழக்கு டெல்லியில் திங்கள்கிழமை தொடங்கிய போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது.

ஜிடிபி மருத்துவமனை அதிகாரி ஒருவர் மேலும் நால்வர் இறந்துள்ள செய்தியை தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

செவ்வாய்கிழமை இரவில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

அதேபோல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள ஜிடிபி மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

டெல்லி வன்முறை குறித்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவொன்றில், பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக அவர்களை இடத்துக்கு அழைத்து செல்ல முழு அளவில் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு படையினரை அமர்த்த டெல்லி போலீஸுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.